விஜய்சேதுபதியுட்ன முதன் முதலாக இணையும் காமெடியன்!

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் மூலம் விஜய்சேதுபதியுடன் முதன் முதலாக இணைந்து நடிக்கும் விவேக்!

செய்திகள் 15-Nov-2019 3:29 PM IST Top 10 கருத்துக்கள்

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, விஜய்சேதுபதி நடிக்கும் 33-ஆவது படமான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் ஒரு முக்கியமான கேரக்டரில் இயக்குனர் மகிழ் திருமேனியும் நடிக்கிறார் என்ற தகவலை எற்கெனவே பதிவு செய்திருந்தோம். இப்போது இந்த படத்தில் விவேக்கும் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பில் விவேக், விஜய்சேதுபதியுடன் இணைந்திருப்பது மாதிரியான ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. விவேக், விஜய்சேதுபதியுடன் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை!

‘சந்திரா ஆர்ட்ஸ்’ நிறுவனமும் ’சினி இனோவேஷன்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார். வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். வீரசமர் கலை இயக்கத்தை கவனிக்கிறார். ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பை கவனிக்கிறார். இந்த படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க அமலா பால் ஒப்பந்தமானார். பிறகு கால்ஷீட் பிரச்சனை காரணமாக அமலா பால் இப்படத்திலிருந்து விலக, மேகா ஆகாஷ் கதாநாயகியாக கமிட்டானார். .

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;