இன்று (15-11-19) சுந்தர்.சி.இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’, விஜய்சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ ஆகிய இரண்டு நேரடி தமிழ் படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படங்களில் ‘ஆக்ஷன்’ படம் அறிவித்திருந்தது போல் இன்று வெளியானது. அனால் விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ தவிர்க்க முடியாத சில காரணங்களால் இன்று வெளியாகவில்லை. இதனால் விஷாலின் ‘ஆக்ஷன்’ இன்று சோலாவாக ரிலீசில் களம் இறங்கியுள்ளது.
‘விஜயா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள ‘சங்கத்தமிழன்’ படம் இந்த வாரம் ரிலீசாக வாய்ப்பிலை என்று கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவிய நிலையில், இந்த படத்தின் தமிழக விநியோக உரிமையை வாங்கியுள்ள ‘லிப்ரா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்தினர் ‘சங்கத்தமிழன்’ படம் திட்டமிட்டபடி நவம்பர் 15-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தது. ஆனால் அந்த அறிவிப்பு படி ‘சங்கத்தமிழன்’ இன்று இதுவரை வெளியாகவில்லை. இதுமாதிரி பல படங்கள் திட்டமிட்டபடி ரிலீசாகாமல், அதன் பிறகு பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு பிற்பகல் வெளியான சம்பவங்கள் கோலிவுட்டில் நடந்தேறியுள்ளது. அதுமாதிரி ‘சங்கத்தமிழன்’ படமும் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு பிற்பகல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#VivekMervin #CinematographerVelraj #VijaySethupathi #RaashiKhanna #SangaThamizhan #Soori #VijayChandar #VijayaProductions #SangaThamizhan#VijaySethupathi
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...
அசோக் செல்வன், ரித்விகா சிங் இணைந்து நடிக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம்...
வெற்றிப் பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் எடுப்பது டிரெண்டாகி உள்ள நிலையில் சுந்தர்.சி.இயக்கத்தில்...