சுந்தர்.சி.இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘ஆக்ஷன்’ படம் இன்று உலகம் முழுக்க வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன்-2’ படத்தில் நடித்து வரும் விஷால், எம்.எஸ்.ஆனந்தன் இயக்கும் படம் ஒன்றிலும் நடித்து வந்தார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க, இவர்களுடன் ரெஜினா கெசண்ட்ரா, ‘ரோபோ’ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா ஆகியோரும் நடிக்கிறார்கள். மற்றும் பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயாவும் இப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் ந்டிக்கிறார். படத்துக்கு பெயர் வைக்காமலே படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் இப்போது படத்திற்கு ‘சக்ரா’ என்று பெயர் வைத்து, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
விஷாலின் ‘ விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விஷால் இராணுவ அதிகாரியாக நடிக்கிறார். இப்படம் தொழில்நுட்படம் சார்ந்த அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் மற்றும் குடும்ப சென்டிமெண்ட் கலந்த படமாக உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை ஷமீர் முகமது கவனிக்க, அனல் அரசு சண்டை காட்சிகளை அமைக்கிறார். கலை இயக்கத்தை எஸ்.கண்ணன் கவனிக்கிறார். சென்னை மற்றும் கோயம்பத்தூரில் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நடந்துள்ளது என்பதையும் இப்படத்தின் 80 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது என்பதையும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம்...
நடிகர்கள் ஜெயராம், தீலீப், சுரேஷ் கோபி, குஷ்பு, தேவயானி உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகளை வைத்து 25...
’விக்ரம் வேதா’ படத்தை தொடர்ந்து மாதவனும் ஷ்ரத்த ஸ்ரீநாத்தும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து...