பிரகாஷ்ராஜ், சாய் பல்லவி நடிக்க, ஆந்தாலஜி படத்தை இயக்கும் வெற்றிமாறன்!

சூரி நடிக்கும் படத்திற்கு முன்பாக பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி நடிப்பில் ஆந்தாலஜி படத்தை இயக்குகிறார் வெற்றிமாறன்!

செய்திகள் 14-Nov-2019 12:28 PM IST Top 10 கருத்துக்கள்

‘அசுரன்’ படத்தின் அசுர வெற்றியை தொடர்ந்து வெற்றிமாறன் சூரி நடிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார் என்றும் இந்த படத்தை ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘கோ’ உட்பட பல வெற்றிப் படங்களை தயாரித்த 'RS இன்போடெய்ன்மெண்ட்' நிறுவனம் தயாரிக்கிறது என்றும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது என்றும் தகவலை சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். ஆனால் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்குவதற்கு முன் வெற்றிமாறன் ‘நெட்ஃபிளிக்ஸு’க்காக ஆந்தாலஜி படம் ஒன்றை இயக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நான்கு இயக்குனர்கள் இயக்கும் இந்த ஆந்தாலஜி படத்தில் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள் என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது. இதனால் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம்

#Vetrimaaran #Soori #Netflix #Anthology #SaiPallavi #PrakashRaj #RSInfotainment #ElredKumar #Asuran

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;