எஸ்.ஜே.சூர்யா படம் – பிரியா பவானி சங்கர் தந்த அப்டேட்!

ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யாவும், பிரியா பவானி சங்கரும்  நடிக்கும் படத்தின் புதிய தகவல்!

செய்திகள் 13-Nov-2019 5:07 PM IST Top 10 கருத்துக்கள்

சமீபத்தில் வெளியாகி வெற்றிப் பெற்ற ‘மான்ஸ்டர்’ படத்தை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யாவும், பிரியா பவானி சங்கரும் இணைந்து நடிக்க ராதா மோகன் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது. ஏஞ்சல்ஸ் ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் சார்பில் எஸ்.ஜே.சூர்யாவே தயாரிக்கும் இப்படத்திற்கு பொம்மை என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் இன்னொரு நாயகியாக சாந்தினி தமிழரசனும் நடிக்க, இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் பிரியா பவானி சங்கர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை பிரியா பவானி சங்கரே இன்ஸ்டாம்கிராம் மூலம் தெரிவித்துள்ளார். இன்ஸ்டாம்கிராமில் பிரியா பவானி சங்கர் பதிவு செய்துள்ளதில், ‘‘பொம்மை’ எனும் படத்தில் எனது பணிகள் நேற்றிரவுடன் நிறைவடைந்தது. இந்த இரவு திடீரென மிக அழகாக இருக்கிறது, என்னை நம்புங்கள்! அனைவருக்கும் என் அன்புகள்’’ என்று குறிப்பிட்டுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவை ரிச்சர்ட் எம்.நாதன் செய்து வருகிறார். கலை இயக்கத்தை கதிர் கவனிக்க, ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தை 2020 ஃபிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

#SJSuryah #AngelStudiosMHLLP #YuvanShankarRaja #RadhaMohan #RichardMNathan #Kadhirr #PriyaBhavaniShankar #SJSuryahFilmFromFebruary14th2020 #ChandiniTamilarasan #Bommai

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;