சூப்பர் ஸ்டார் படத்துடன் வெளியாகும் அகில சூப்பர் ஸ்டார் படம்!

‘தர்பார்’ படத்துடன் பொங்கலுக்கு களமிறங்கும் மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’

செய்திகள் 13-Nov-2019 12:00 PM IST Top 10 கருத்துக்கள்

பி.எஸ்.அமுதன் இயக்கத்தில் வெளியான ‘தமிழ் படம்’ மற்றும் ‘தமிழ் படம்-2’ ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ‘அகில உலக சூப்பர் ஸ்டாரா’ன ‘மிர்ச்சி’ சிவா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சுமோ’. ‘ஃபிப்ரவரி-14’ படத்தை இயக்கிய எஸ்.பி.ஹோசிமின் இயக்கி வரும் இந்த படத்தை ‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் சிவாவுடன் பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் வி.டி.வி.கணேஷ், யோகி பாபு ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். இந்தோ – ஜாப்பானை சேர்ந்த சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜப்பானில் 35 நாட்கள் நடைபெற்றுள்ளது. அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து இப்போது படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து வரும் நிலையில் இந்த படத்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். பொங்கலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படம் வெளியாக இருக்கும் நிலையில் இப்போது ‘அகில் உலக சூப்பர் ஸ்டார்’ மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சுமோ’வும் வெளியாக இருக்கிற தகவல் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் என்பது நிச்சயம். ‘சுமோ’ படத்தில் சிவா கதாநாயகனாக நடிப்பது மட்டுமின்றி இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களையும் அவரே எழுதியுள்ளார். இந்த படத்தின் ஒளிப்பதிவை ராஜீவ் மேனன் கவனித்துள்ளார். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார். படத்தொகுப்பை பிரவீன் கே.எல்.கவனிக்கிறார்

#Sumo #MirchiShiva #RajivMenon #SPHosimin #SumoWrestling #SPHosimin

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அட்ரா மச்சான் விசிலு - டிரைலர்


;