உதயநிதி, மிஷ்கின் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘ சைக்கோ’  டிசம்பர் 27-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது!

செய்திகள் 12-Nov-2019 10:46 AM IST Top 10 கருத்துக்கள்

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதிராவ், இயக்குனர் ராம் ஆகியோர் நடிக்கும் படம் ‘சைக்கோ’. இளையராஜா இசை அமைக்கும் இந்த படத்தில் முதலில் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் பி.சி.ஸ்ரீராமுக்கு உடல் நல குறைவு ஏற்பட, காஷ்மீரை சேர்ந்த தன்வீர் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமானார். இதனை தொடர்ந்து அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்த இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தை டிசம்பர் 27-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ‘Double Meaning Productions’ என்ற நிறுவனம் தயாரிக்கும் ‘சைக்கோ’ படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ‘சைக்கோ’ படத்தை தொடர்ந்து மிஷ்கின் இப்போது ‘துப்பறிவாளன்-2’ படத்தை இயக்கி வருகிறார். விஷால் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது லண்டனில் நடந்து வருகிறது.

#Psycho #Mysskin #DirectorRam #NithyaMenen #AditiRaoHydari #UdhayanidhiStalin #PCSreeram #Ilaiyaraaja

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;