‘சூரரைப் போற்று’வில் தனது கேரக்டர் குறித்த தகவலை வெளியிட்ட சூரயா!

‘சூரரைப் போற்று’ படத்தில் சாதாரண மனிதராக, பெரிய கனவுகள் கொண்ட  ‘மாரா’ என்ற கேரக்டரில் நடிக்கிறார் சூர்யா!

செய்திகள் 11-Nov-2019 2:11 PM IST Top 10 கருத்துக்கள்

‘இறுதிச்சுற்று’ சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரை போற்று’. சூர்யாவின் 38-வது படமாக உருவாகி வரும் இப்படத்தில் சூர்யாவுடன் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க, பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள சூர்யா, இப்படத்தில் ‘சாதாரண ஒரு மனிதராக, அதே நேரம் பெரிய கனவுகள் கொண்ட ‘மாரா’ என்ற கேரக்டரில் நடித்திருக்கிற தகவலையும் சூர்யா பதிவு செய்துள்ளார்.

‘காப்பான்’ படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். ஒளிப்பதிவை நிக்கேத் பொம்மிரெட்டி கவனித்துள்ளார். கலை இயக்கத்தை ஜாக்கி செய்துள்ளார். சதீஷ் சூர்யா படத்தொகுப்பு செய்து வருகிறார். சூர்யாவின் ‘2D ENTERTAINMENT’ நிறுவனமும் ‘Sikhya Entertainment’ என்ற நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படம் ‘இறுதிச்சுற்று’ படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம், சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் என்று பல்வேறு ஏதிர்பார்ப்புகளுடன் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#SooraraiPottru #Suriya #Suriya38 #GVPrakashKumar #Aparnabalamurali #SudhaKongara #MohanBabu #SooraraiPottruFirstLook #SuriyaAsMaara

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;