தர்புகா சிவா இசை, அமைத்து இயக்கும் படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?

தர்புகா சிவா இசை அமைத்து இயக்கும் படம் ‘முதல் நீ முடிவும் நீ’

செய்திகள் 9-Nov-2019 1:42 PM IST Top 10 கருத்துக்கள்

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. தனுஷ், மேகா ஆகாஷ் நடித்துள்ள இந்த படம் இம்மாதம் 29-ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்திற்கு தர்புகா சிவா இசை அமைத்துள்ளார். இவர் இசையில் இப்படத்தில் இடம் பெறும் ‘மறு வார்த்தை பேசாதே…’ என்று துவங்கும் பாடல் பட்டித்தொட்டி எங்கும் செம வைரலான பாடலாகும். இந்த பாடல் மூலம் பெரும் கவனத்தை ஈர்த்த தர்புகா சிவா

சசிகுமார் நடிப்பில் வெளியான ‘கிடாரி’, ‘பலே வெள்ளைய தேவா’ ஆகிய திரைப்படங்களுகும் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் தர்புகா சிவா ஒரு படத்தையும் இயக்கி வந்தார். ‘சூப்பர் டாக்கீஸ்’ என்ற நிறுவனம் சார்பில் சமீர் பரத் ராம் மற்றும் தீபா ஐயர் இணைந்து தயாரிக்க தர்புகா சிவா இசை அமைத்து இயக்கியுள்ள படத்திற்கு ‘முதல் நீ முடிவும் நீ’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த தகவலை தர்புகா சிவா வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்துள்ளது என்றும் படத்தில் நடித்துள்ள நடிகர்கள், நடிகைகள் மற்றும் படத்தில் பணிபுரிந்துள்ள மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்களை அடுத்தடுத்து அறிவிக்க இருக்கிறார்கள்.

#DarbukaSiva #MaruvaarthaiPesaathe #MudhalNeeMudivumNee #SameerBharatRam #DeepaIyer #SuperTalkies

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விசிறி சூட் டீஸர் - எனை நோக்கி பாயும் தோட்டா


;