‘ஆடை’க்கு பிறகு அமலாபால் நடிக்கும் படத்தின் சென்சார் ரிசல்ட்!

அமலா பால் நடிக்கும் அதோ அந்த பறவை போல படத்திற்கு ‘U’ சர்டிஃபிக்கெட்!

செய்திகள் 6-Nov-2019 4:26 PM IST Top 10 கருத்துக்கள்

‘ஆடை’ படத்திற்கு பிறகு அமலா பால் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’. அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை செஞ்சுரி இண்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜோன்ஸ் தயாரிக்கிறார். கேரளா, கர்நாடக எல்லையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அடர்ந்த காட்டுக்குள் நடக்கிற மாதிரியான கதை அம்சம் கொண்ட அட்வெஞ்சர் த்ரில்லர் படம் இது என்று கூறப்படுகிறது. ‘ஆடை’ படத்தை போலவே கதாநாயகி கேரக்டரை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் சென்சார் காட்சி நடைபெற்று முடிந்துள்ளது. சென்சார் குழுவினர் ‘அதோ அந்த பறவை போல’ படத்திற்கு ‘U’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். அமலாபாலின் ‘ஆடை’ படத்திற்கு சென்சாரில் ‘A’ சர்டிஃபிக்கெட் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அருண் ராஜகோபாலன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி எழுதயுள்ள இந்த படத்தில் அமலாபாலுடன் ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார், குழந்தை நட்சத்திரம் பிரவீன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். ஜேக்ஸ் பிஜாய் இசை அமைக்கிறார். சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை ஜான் ஆப்ரகாம் செய்து வருகிறார். கலை இயக்கத்தை சரவணன் கவனித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அதோ அந்த பறவை போல டீஸர்


;