டோவினோ தாமஸ் படத்தில் இணைந்த ‘பிகில்’ நடிகை!

டோவினோ தாமஸ் நடிக்கும் ‘ஃபாரன்சிக்’ மலையாள படத்தில் நடிக்கும் ரெபா மோனிகா ஜான்!

செய்திகள் 5-Nov-2019 8:00 PM IST Top 10 கருத்துக்கள்

சமீபத்தில் வெளியான ‘பிகில்’ படத்தில் நயன்தரா தவிர்த்து ரெபா மோனிகா ஜான், இந்துஜா, வர்ஷா, அம்ருதா ஐயர் என்று பல நடிகைகள் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்தனர். இவர்களில் ரெபா மோனிகா ஜான், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார். இந்நிலையில் இவருக்கு மலையாளத்தில் டோவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்து வரும் ‘ஃபான்சிக்’ (Forensic) என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ‘ஜேக்கபின்டெ ஸ்வர்க ராஜ்யம்’ என்ற மலையாள படத்தின் மூலம் கதாநாயகி நடிகையாக அறிமுகமான ரெபா மோனிகா ஜான் இந்த படத்தை தொடர்ந்து வேறு சில மலையாள படங்களிலும் தமிழ் படங்களிலும் நடித்திருந்தார். இப்போது ‘பிகில்’ படத்தை தொடர்ந்து மற்றுமொரு மலையாள படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் ரெபா மோனிகா ஜான். அகில் பால் மற்றும் அனாஸ் கான் இணைந்து இயக்கும் இந்த படத்தில் ஒரு முக்கியமான ஒரு கேரக்டரில் மம்தா மோகன் தாஸும் நடிக்கிறார்!

#RebaMonicaJohn #TovinoThomas #MamtaMohandas #Forensic #Bigil #DhanusuRaasiNeyargale

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;