‘ஆம்பள’ படத்தை தொடர்ந்து விஷாலும், சுந்தர்.சியும் இணைந்து உருவாக்கியுள்ள படம் ‘ஆக்ஷன்’. டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆர். ரவீந்திரன் தயாரித்துள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இவர்களுடன் வில்லனாக கபீர் துஹான் சிங் நடிக்க, ஐஸ்வர்யா லட்சுமி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். விஷாலும், தமன்னாவும் இராணுவ கமாண்டோ வீரர்களாக நடிக்கும் இந்த படத்தின் டீஸர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் டைட்டிலுக்கு ஏற்ற மாதிரி அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இபடத்தை இம்மாதம் 15-ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசை அமைத்துள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை டியுட்லீ கவனடித்துள்ளார். கலை இயக்கத்தை துரைராஜ் மேற்கொண்டுள்ளார்.. காமெடி கலந்த குடும்ப கதைகள் மற்றும் ஹாரர் ரக படங்களை இயக்கி வந்த சுந்தர்.சி. இப்படத்தின் மூலம் ஆக்ஷன் அதகளத்தில் குதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#ActionFromNov15th #SundarC #TridentArts #TamannahBhatia #Vishal #HiphopTamizha #KabirDuhanSingh #Action #AishwaryaLekshmi
‘மீசையை முறுக்கு’, ‘நட்பே துணை’ ஆகிய படங்களை தொடந்து சுந்தர்.சி.யின் ‘ஆவ்னி மூவீஸ்’ நிறுவனம்...
‘முகவரி’, ‘நேபாளி’, ‘தொட்டி ஜெயா’ முதலான படங்களை இயக்கிய V.Z. துரை இயக்கத்தில் சுந்தர்.சி., தன்ஷிகா...
அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கத்தில், வைபவ், பாலக் லல்வானி கதாநாயகன் கதாநாயகியாக நடிக்கும் படம்...