கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, ராணா, சசிகுமார் ஆகியோர் நடித்துள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. கௌதம் மேனனின் ‘ஒண்ட்ராகா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனமும் மதனின் ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படம் நான்கைந்து முறை ரிலீஸ் தேதிகள் அறிவித்தும் சில பிரச்சனைகள் காரணமாக இப்படம் அந்த தேதிகளில் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த படத்தை ஐசரி கணேஷின் ‘வேல் ஃபிலிம்ஸ் இண்டர் நேஷனல்’ நிறுவனம் கைபற்றியுள்ளது. இதனை தொடர்ந்து ‘எனை நோக்கி பாயும் தோட்டா’வை இம்மாதம் 29-ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் இந்த முறையாவது இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீசாகும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
அநேரம் இப்பட நிறுவனம் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுடன் மற்றொரு படத்தின் மூலம் கூட்டணி அமைத்துள்ளது. அதாவது, ‘வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் தயாரிக்க, ‘ஜோஷ்வா’ என்ற படத்தை இயக்குகிறார் கௌதம் வாசுதேவ்மேனன். இந்த படத்தில் பல்வேறு திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவ்ரும் சமீபத்தில் வெளியான ‘பப்பி’ படத்தின் மூலம் ஹீரோவாக புரொமோஷன் பெற்றவருமான வருண் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். ‘ஜோஷ்வா’ என்ற டைட்டிலுக்கு கீழே ‘இமை போல் காக்கா…’ என்ற டேக் லைனுடன் வெளியாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் இப்படத்தை 2020 காதலர் தினத்தன்று வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் கௌதம் வாசுதேவ் மேனன் ஸ்டைலில் காதலும், அதிரடி ஆக்ஷனும் கலந்த படமாக உருவாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் வருணுடன் அறிமுகம் ராஹி கதாநாயகியாக நடிக்கிறார் என்ற தகவலையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி வரும் மற்றொரு படமான ‘துருவ நட்சத்திரம்’ படமும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், மலையாள நடிகர் விநாயகன், பார்த்திபன், ராதிகா உட்பட பலர் நடிக்கின்றனர்.
#Varun #VelsFilmInternational #GauthamVasudevMenon #IshariKGanesh #ENPT #Puppy #EnaiNokiPaayumThotta #Dhanush #JoshuaFirstLook #Joshua #ENPTFromNov29 #Raahai
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி...
மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் படம் ‘FIR’. ‘சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம்...
‘யோகி’ பாபு, வருண், சம்யுக்த ஹெக்டே ஆகியோர் நடிக்கும் படம் ‘பப்பி’. இந்த படத்தில் படத்தின் டைட்டில்...