டெர்மினேட்டர் டார்க் ஃபேட் – விமர்சனம்

‘டெர்மினேட்டர் டார்க் ஃபேட்’ ஆக்‌ஷன் விருந்து!

விமர்சனம் 2-Nov-2019 1:00 PM IST VRC கருத்துக்கள்

இயக்கம் – டிம் மில்லர்

நடிப்பு – அர்னால்ட் கவாஸ்னெகர், லிண்டா ஹாமில்டன், மெக்கன்சி டேவிஸ், நடாலியா ரேஸ், கேப்ரியல் லூனா

‘டெர்மினேட்டர்’ வகை படங்களுக்கு உலக அளவில் மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். டெர்மினேட்டர் படத்தின் ஆஸ்தான நடிகராக இருந்து வரும் ஆர்னால்ட் இந்த பாகத்துடன் விடை பெறுகிறார் என்ற தகவல் வெளியாகியிருப்பதால் ‘டெர்மினேட்டர் டார்க் ஃபேட்’ பெரும் ஏதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ளது. அர்னால்ட் கவாஸ்னெகர், லிண்டா ஹாமில்டன், மெக்கன்சி டேவிஸ், நடாலியா ரேஸ், கேப்ரியல் லூனா முதலானோர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டெர்மினேட்டர் டார்க் ஃபேட்’ ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக உருவாகியுள்ளதா?

பூமியில் வசிக்கும் நடாலியாவுக்கு பிறக்கும் குழந்தை எதிர்காலத்தில் எந்திரங்களின் தாக்குதலில் இருந்து உலகை காப்பாற்றும் என்பதால் அவரை கொல்வதற்காக முழு எந்திரமனிதன் கேப்ரியல் லூனா வருகிறார். இந்நிலையில் நடாலியாவை காப்பாற்ற பாதி மனித உடலும், பாதி எந்திரமுமாக மெக்கன்சி டேவிஸும் களம் இறங்குகிறார். கேப்ரியல் லூனாவின் தாக்குதலில் நடாலியாவின் அண்ணன் இறந்து விடுகிறான். மெக்கன்சியா டேவிஸ் மற்றும் நடாலியாவால் மட்டும் எந்திரமனிதனான கேப்ரியல் லூனாவை அழிக்க முடியாது என்ற தருணம் உருவாக, இவர்களுக்கு உதவ முன்னாள் எந்திர மனிதனான அர்னால்ட் வருகிறார். அதன் பிறகு நடக்கும் அதிரடி போராட்டங்கள் தான் படம்!

டிம் மில்லர் இயக்கியுள்ள இந்த படம், நடாலியாவை கொல்ல எந்திர மனிதனான் கேப்ரியல் லூனா வருவதிலிருந்து சூடு பிடிக்கிறது. கேப்ரியல் லூனாவின் தாக்குதல்களை முறியடிக்கும் நடாலியாவின் சண்டை காட்சிகள் ரசிகர்களை சீட்டின் நுனிக்கு இழுக்கின்றன. அர்னால்ட் இடைவேளைக்கு பிறகு வருவது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் அளித்தாலும், இடைவேளைக்கு பிறகு அந்த குறையை தீர்க்கும் விதமாக அர்னால்ட் அதிரடி காட்டி ரசிக்க வைக்கிரார். விமானத்தில் எந்திரமனிதனான கேப்ரியல் லூனாவுடன் மோதுவது, தண்ணீருக்கடியிலான சண்டை காட்சிகள் என்று அர்னால்ட், கேப்ரியல் லூனா சம்பந்தப்பட்ட காட்சிகள் மிரட்டல் ரகம்! இதற்கு முன் வந்த பாகங்களில் இருந்த விறுவிறுப்பும், அதிரடிகளும் இப்படத்தில் இல்லை என்பது ஒரு குறையாக இருந்தாலும் நிறைய சென்டிமெண்ட் விஷயங்கள், எமோஷன் காட்சிகள் என்று பயணிக்கும் இந்த பாகம் ரசிகர்களை ஏமாற்றாது!

பொதுவாக தமிழில் டப்பிங் செய்யப்படும் ஆங்கில படங்களில் இடம்பெறும் தமிழ் வசனங்களில் மிகைத்தன்மை அதிகம் இருக்கும். ஆனால் இப்படத்தில் ஒவ்வொரு கேரக்டருக்கும் வழங்கப்பட்டுள்ள வசனங்களும், குரலும் குறை சொல்ல முடியாத அளவுக்கு நேர்த்தியாக அமைந்து ரசிக்க வைக்கிறது.

மொத்தத்தில் ‘டெர்மினேட்டர் டார்க் ஃபேட்’ ஆக்‌ஷன் விருந்து!

#ArnoldSchwarzenegger #TimMiller #JamesCameron #ParamountPictures #20thCenturyFox #LindaHamilton #MackenzieDavis #NataliaReyes #GabrielLuna #DiegoBoneta #TomHolkenborg

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய வீடியோக்கள்

டெர்மினேட்டர் ஜெனிசிஸ் - டிரைலர்


;