மீண்டும் திரைப்பட விநியோகத்தில் களம் இறங்கிய ராஜ்கிரண்!

ராஜ்கிரண், மம்முட்டி, மீனா நடிக்கும் ‘குபேரன்’ படத்தை தமிழகத்தில் ராஜ்கிரண் வெளியிடுகிறார்!

செய்திகள் 1-Nov-2019 6:14 PM IST VRC கருத்துக்கள்

முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள ராஜ்கிரண் முதன் முதலாக நடித்துள்ள மலையாள படம் ‘ஷைலோக்’. அஜய்வாசுதேவ் இயக்குக்ம் இந்த படத்தில் மம்முட்டி கதையின் நாயகனாக நடிக்க மம்முட்டிக்கு இணையான இன்னொரு நாயகனாக ராஜ்கிரண் நடிக்கிறார். ராஜ்கிரணுக்கு ஜோடியாக மீனா நடிக்கிறார். ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் இணைந்து நடித்த ராஜ்கிரணும், மீனாவும் 28 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தில் ராஜ்கிரண் தமிழ் பேசும் கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படம் தமிழிலும் வெளியாக இருக்கிறது. ‘குபேரன்’ என்ற பெயரில் தமிழில் வெளியாக இருக்கும் இந்த படத்தை ராஜ்கிரணின் ‘ரெட் சன் ஆர்ட்ஸ்’ நிறுவனம் வெளியிடுகிறது. ஏற்கெனவே பல வெற்றிப் படங்களை தயாரித்தும், விநியோகித்தும் வழங்கிய நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராஜ்கிரண் வெளியிடும் இந்த படம் ராஜ்கிரணும், மம்முட்டியும் இணைந்து நடிக்கும் முதல் படம், என்பதோடு ராஜ்கிரண் நடிக்கும் முதல் மலையாள படமும் கூட என்ற பெருமையும் இப்படத்திற்கு உண்டு! அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்ததை தொடர்ந்து இறுதிகட்ட வேலைகள் நடந்து வரும் இப்படம் தமிழ், மலையாளம் என இரண்டும் மொழிகளிலும் டிசம்பர் மாதம் வெளியாகிறது.

#Mammootty #Rajkiran #Meena #Kuberan #ShylockTheMoneyLender #RedsunArtCreations #KuberanFromDecember #ShylockFromDecember #GoodWillEntertainments

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பேரன்பு ட்ரைலர்


;