புதிய தமிழ் படங்கள் வெளியாகாத வாரம்!

இந்த வாரம் எந்த புதிய தமிழ் திரைப்படங்களும் ரிலீசில்லை!

செய்திகள் 1-Nov-2019 1:01 PM IST VRC கருத்துக்கள்

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் வாரத்துக்கு இரண்டு படங்கள் முதல் ஐந்தாறு படங்கள் வெளியாவது வழக்கமாக இருந்து வருகிறது. முன்பை விட தமிழ் திரைப்படங்களின் தயாரிப்பு அதிகமாகி உள்ளதால் இது போன்று வாரத்துக்கு இரண்டு படங்கள் முதல் ஐந்தாறு படங்கள் வரை வெளியாகி வருகிறது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு கார்த்தியின் ‘கைதி’. விஜய்யின் ‘பிகில்’ ஆகிய படங்கள் சென்ற மாதம் 25-ஆம் தேதி வெள்ளிக் கிழமை வெளியானது. இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் இந்த வாரம், அதாவது வழக்கமாக புதிய படங்கள் வெளியாகும் வெள்ளிக்கிழமையான இன்று (1-11-19) எந்த புதிய தமிழ் திரைப்படமும் வெளியாகவில்லை.

இதற்கு முன் சென்ற ஜனவரி மாதம் பொங்ல் பண்டிகையை முன்னிட்டு ரஜினிகாந்தின் ‘பேட்ட’, அஜித்தின் ‘விஸ்வாசம்’ ஆகிய படங்கள் ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகின! இந்த இரண்டு படங்களுக்கும் இப்போது ‘பிகில்’ மற்றும் ‘கைதி’ படங்களுக்கு கிடைத்த வரவேற்பைப் போன்று ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது அப்படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தது. பொங்கலுக்கு வெளியான பேட்ட, விஸ்வாசம் படங்களை தொடர்ந்து அடுத்த வாரம் குறிப்பிடும்படியாக எந்த புதிய தமிழ் படங்களும் வெளியாகவில்லை. அதைப் போலவே தீபாவளியை முன்னிட்டு சென்ற வாரம் வெளியான ‘கைதி’, ‘பிகில்’ ஆகிய படங்களை தொடர்ந்து இந்த வாரம் எந்த புதிய தமிழ் திரைப்படமும் வெளியாகவில்லை! இந்த இரண்டு படங்களுக்கும் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாலும் இந்த படங்களுக்கு முன் வெளியான தனுஷின் ‘அசுரன்’ சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ முதலான படங்கள் இன்னமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாலும் இந்த வாரம் எந்த புதிய தமிழ் படமும் ரிலீஸுக்கு முன் வரவில்லை. அடுத்த வாரம் அதாவது நவம்பர் 8-ஆம் தேதி துருவ் விக்ரம் நடிக்கும் ‘ஆதித்யா வர்மா’ யோகி பாபு நடிக்கும் ‘பட்லர் பாலு’, சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘மிக மிக அவசரம்’, சீமான் நடிக்கும் ‘தவம்’ ஆகிய படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. .

#NoMovieRelease #Kaithi #Bigil #NammaVeettuPillai #Asuran #NoMovieReleaseWeek

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;