மீண்டும் ஹரீஷ் கல்யாண் படத்தில் இணைந்த அனிருத்!

ஹரீஷ் கல்யாண் நடிக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்திற்காக பாடல் பாடிய அனிருத்!

செய்திகள் 31-Oct-2019 12:34 PM IST Top 10 கருத்துக்கள்

‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் நடிக்கும் படங்கள் ‘தனுசு ராசி நேயர்களே’, ‘கசட தபற’. இதில் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை நடிகரும் இயக்குனருமான சந்தானபாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கி வருகிறார். ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து இப்போது இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறதுஜ். இந்த படத்தில் ஹரீஷ் கல்யாணுடன் ரெபா மோனிகா ஜான், பாலிவுட் பிரபலம் Digangana Suryavanshi ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

‘ஸ்ரீகோகுலம் மூவீஸ்’ நிறுவனம் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். இந்நிலையில் இப்படத்திற்காக ஜிப்ரான் இசையில் இளமை துள்ளும் பெப்பி மெலடி பாடல் ஒன்றை அனிருத் பாடியுள்ளார். கு.கார்த்திக் எழுதிய இந்த பாடல் படத்தின் கதாநாயகன் தனது துணையை தேடி பாடும் பாடலாம்! ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்திற்காக ‘கண்ணம்மா…’ என்ற பாடலை பாடியிருந்தார் அனிருத்! இப்பாடல் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாடலை தொடர்ந்து இப்போது மீண்டும் ஹரீஷ் கல்யாணுக்காக பாடலை பாடியுள்ளார் அனிருத்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;