‘டில்லி’ ரிட்டேன்ஸ்! – இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

‘கைதி’ இரண்டாம் பாகம் வருவதை உறுதி செய்த கார்த்தி, இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

விமர்சனம் 26-Oct-2019 12:04 PM IST Top 10 கருத்துக்கள்

‘மாநகரம்’ படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நேற்று வெளியான படம் ‘கைதி’. பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்து வழங்கிய ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனமும் ‘விவேகானந்தா பிக்சர்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்த இப்படத்தில் கார்த்தி கதையின் நாயகனாக நடிக்க இபடத்தின் முக்கிய கேரக்டர்களில் நரேன், மரியாம் ஜார்ஜ், ரமணா உட்பட பலர் நடித்துள்ளர். தீபாவளியை முன்னிட்டு நேற்று வெளியான இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், கமர்ஷியல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இப்படம் வெளியான எல்லா தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. ‘கைதி’ படத்தின் கதையும், கிளைமேக்ஸும் அடுத்த பாகத்துக்கான சாத்தியக்கூறுகளுடன் அமைக்கப்பட்டிருந்ததால் ‘கைதி’யின் இரண்டாம் பாகம் வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவானது. இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும் விதமாக ‘கைதி’ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘கைதி’ படம் சம்பந்தமாக பதிவிட்டுள்ள ட்வீட்டில் ‘Dilli will be back’ என்று பதிவிட்டு ‘கைதி’ இரண்டாம் பாகம் வரவிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன் ‘கைதி’ படம் வெளியாகி நல்ல வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் கார்த்தி சற்றுமுன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது கார்த்தி பேசும்போதும் ‘கைதி’ இரண்டாம் பாகம் உருவாக இருப்பதை உறுதி செய்தார். இதனால் ‘கைதி’ இரண்டாம் பாகம் உருவாவது உறுதியாகியுள்ளது.

#DilliWillBeBack #LokeshKanagaraj #DreamWarriorPictures #SRPrabhu #SRPRakashBabu #VivekanandaPictures #Karthi #Kaithi #Kaithi2 #SamCS #SathyanSooryan #PhilominRaj

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அருவி - ட்ரைலர்


;