தெலுங்கில் ‘அசுரனா’கும் வெங்கடேஷ்!

வெங்கடேஷ் நடிப்பில் தெலுங்கில் ரீ-மேக்காகிறது தனுஷின் ‘அசுரன்’

செய்திகள் 26-Oct-2019 10:59 AM IST Top 10 கருத்துக்கள்

‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரிப்பில் இம்மாதம் 4-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வசூல் குவித்துக் கொண்டிருக்கும் படம் ‘அசுரன்’. ரசிகர்களிடம் மட்டும் அல்லாமல் பல்வேறு தரப்பிரினரின் பாராட்டு பெற்று வெற்றிகரமாக கொண்டிருக்கும் ‘அசுரன்’ தெலுங்கு மொழியில் ரீ-மேக்காகிறது. தமிழில் தனுஷ் நடித்த கேரக்டரில் தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்கிறார். தெலுங்கில் இப்படத்தை நடிகர் வெங்கடேஷின் சகோதரர் சுரேஷ் பாபுவும், தமிழில் அசுரனை தயாரித்த ‘கலைப்புலி’ எஸ்.தாணுவும் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்தை இயக்க இருக்கும் இயக்குனர், இப்படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள், இப்படத்தில் பணிபுரிய இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் ‘அசுரன்’ படத்தை பார்த்து தெலுங்கு சினிமாவின் இன்னொரு முன்ன்ணி நடிகரான மகேஷ் பாபு பாராட்டு தெரிவித்திருந்த நிலையில் வெங்கடேஷ் நடிப்பில் அசுரன் உருவாக இருக்கிறது.

#Vetrimaaran #Dhanush #ManjuWarrier #GVPrakashKumar #Asuran #PrakashRaj #Venkatesh #Teejay

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;