ஐமேக்ஸ் திரையரங்கில் வெளியாகும் முதல் தமிழ் படம் ‘பிகில்’

ஐமேக்ஸ் திரையரங்கில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்ற பெருமை  ‘பிகில்’ படத்திற்கு கிடைத்துள்ளது!

செய்திகள் 24-Oct-2019 6:20 PM IST Top 10 கருத்துக்கள்

இயக்குனர் அட்லி, நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது படம் ‘பிகில்’. தீபாவளியை முன்னிட்டு நாளை (அக்டோபர்-25) உலகம் முழுக்க வெளியாக இருக்கிறது ‘பிகில்’. இந்நிலையில் ‘பிகில்’ படத்திற்கு இதுவரை எந்த தமிழ் சினிமாவுக்கும் கிடைக்காத ஒரு பெருமை கிடைத்துள்ளது. அதாவது, சென்னை வேளச்சேரியிலுள்ள லூக்ஸ் திரையரங்க வளாகத்தில் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப் பெரிய தியேட்டர் உள்ளது. அதைப் போல சென்னை வடபழனியிலுள்ள பலாசோ திரையரங்க வளாகத்திலும் ஐமேக்ஸ் திரையரங்கம் ஒன்று சென்ற ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த ஐமேக்ஸ் திரையரங்குகளில் மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்படும் சில ஆங்கில படங்களும், சில ஹிந்தி படங்கள் மட்டுமே இதுவரையில் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை வடபழனியிலுள்ள சத்யம் குழுமத்தின் தியேட்டர் வளாகமான ‘பலாசோ’வில் அமைந்துள்ள ஐமேக்ஸ் திரையரங்கில் விஜய்யின் ‘பிகில்’ திரைப்படம் திரையிடப்பட இருக்கிறது. இதனால் ஐமேக்ஸ் திரையரங்கில் திரையிடப்படும் முதல் தமிழ் படம் என்ற பெருமை விஜய்யின் ‘பிகில்’ படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த திரையரங்கில் புதிய அனுபவத்துடன் ரசிகர்கள் ‘பிகில்’ படத்தை கண்டு களிக்கலாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;