விஜய் வெளியிட்ட ‘பிகில்’ எமோஜி!

பிகில் படத்தின் ‘எமோஜி’யை தனது ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்டார் விஜய்!

செய்திகள் 24-Oct-2019 10:51 AM IST Top 10 கருத்துக்கள்

நடிகர் விஜய், இயக்குனர் அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது படம் ‘பிகில்’. தீபாவளியை முன்னிட்டு நாளை மறுநாள் (அக்டோபர்-25) வெளியாக இருக்கும் ‘பிகில்’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வைரலாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, இவர்களுடன் கதிர், ஜாக்கி ஷெராஃப், இந்துஜா, வர்ஷா உட்பட பலர் நடித்துள்ளனர்.

மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாகியுள்ள ‘பிகில்’ படத்தின் தயாரிப்பு செலவு மட்டும் 180 கோடி ரூபாய் ஆகியுள்ளதாகவும் இப்படம் பெரிய அளவில் உலகம் முழுக்க வெளியாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார் இந்த படத்தை தயாரித்திருக்கும் ‘ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்தை சேர்ந்த அர்ச்சனா கல்பாத்தி! இந்நிலையில் இப்படம் வெளியாக இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் ‘பிகில்’ எமோஜியை விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘பிகில்’ எமோஜி வெளியானது முதல் ரசிகர்கள் அதை ட்விட்டரில் ஷேர் செய்து டிரெண்டாக்கி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;