சிவகார்த்திகேயனின் அட்வான்ஸ் தீபாவளி ட்ரீட்!

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ஹீரோ’ படத்தின் டீஸர் நாளை வெளியாகிறது!

செய்திகள் 23-Oct-2019 11:40 AM IST Top 10 கருத்துக்கள்

‘இரும்புத்திரை’ படத்தை தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கி வரும் படம் ‘ஹீரோ’. சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்சன் கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் அர்ஜுன், அபய் தியோல், இவானா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் வெளியான ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம், ‘இரும்புத்திரை’ படத்தை தொடர்ந்து பி.எஸ்.மிதிரன் இயக்கத்தில் உருவாகும் படம் என்று பல்வேறு சிறப்புக்களுடன் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாகியுள்ள இந்த படத்தின் டீஸரை நாளை காலை 11.03 மணிக்கு வெளியிட இருக்கிறார்கள். வருகின்ற 27-ஆம் தேதி தீபாவளி பண்டிகை வரவிருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இந்த டீஸர் தீபாவளி ட்ரீட்டாக அமையவிருக்கிறது. ‘இரும்புத்திரை’யில் இசை அமைப்பாளராக பணிபுரிந்த யுவன் சங்கர் ராஜாவே இப்படத்திற்கும் இசை அமைக்க, ‘இரும்புத்திரை’க்கு ஒளிப்பதிவு செய்த ஜார்ஜ் வில்லியம்ஸ், படத்தொகுப்பு செய்த ஆண்டனி ரூபன் ஆகியோரும் இப்படத்தில் பணிபுரிகின்றனர்.

#PSMithran #IrumbuThirai #Hero #SivaKarthikeyan #KJRStudios #KalyaniPriyadarshan #Arjun #AbhayDeol #HeroTeaserFromTomorrowAt1103AM #HeroTeaser

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;