‘ஆதித்யா வர்மா’வில் சிவகார்த்திகேயன்!

துருவ் விக்ரம் நடிக்கும் ‘ஆதித்யா வர்மா’வுக்காக பாடல் எழுதிய சிவகார்த்திகேயன்!

செய்திகள் 22-Oct-2019 1:57 PM IST Top 10 கருத்துக்கள்

தெலுங்கு ‘அர்ஜுன் ரெட்டி’யின் தமிழ் ரீ-மேக்காக உருவாகியுள்ள படம் ‘ஆதித்ய வர்மா’. ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டியிடம் உதவியாளராக பணியாற்றிய கிரிசாயா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் துருவ் விக்ரம், பாலிவுட் நடிகை பனிதா சந்து, பிரியா ஆனந்த் இணைந்து நடித்துள்ளனர். ‘அர்ஜுன் ரெட்டி’ படத்திற்கு இசை அமைத்த ரதனே இப்படத்திற்கும் இசை அமைத்துள்ளார். ஆதித்யா வர்மா அடுத்த மாதம் (நவம்பர்) 8-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் சினிமாஸில் நடைபெற்றது. இந்த படத்திற்காக் துருவ் விகர்ம் ஒரு பாடலை பாடியிருப்பதோடு ராப் பாடல் ஒன்றை எழுதவும் செய்துள்ளார் என்ற தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதியுள்ளார் என்ற தகவலை ஆடியோ வெளிட்யீட்டு விழாவில் நடிகரும், துருவின் அப்பாவுமான விக்ரம் பேசும்போது குறிப்பிட்டார். அத்துடன் விக்ரம் பேசும்போது, ‘ப்ளஸ்-டூ’விறகு பரீட்சை எழுதி ரிசல்ட்டுக்கு காத்திருக்கும்போது இருந்தந்தை விட, ‘சேது’ படம் ரிலீஸாகும்போது இருந்ததை விட ஒருவித பயமும், பதற்றமும் ‘ஆதித்யா வர்மா’ படம் ரிலீசாக இருக்கும் நிலையில் எனக்கு இருக்கிறது’’ என்றார் விக்ரம்!

‘E4 ENTERTAINMENT’ நிறுவனம் சார்பில் முகேஷ் மேத்தா தயாரித்துள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை ரவி கே.சந்திரன் கவனித்துள்ளார்.


#AdithyaVarma #DhruvVikram #BanitaSandhu #PriyaAnand #Gireesaya #ArjunReddy #KabirSingh
#Vikram

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆதித்ய வர்மா ட்ரைலர்


;