‘தீபாவளி ரிலீஸ்’ என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும் எந்தப்படம் எந்த தேதியில் ரிலீஸ் ஆகும் என்ற பெரிய எதிர்பார்ப்பு இன்டஸ்ட்ரி மட்டுமின்றி விஜய், கார்த்தி ரசிகர்களிடத்திலும் மிகப்பெரிய அளவில் இருந்தது. மிகப்பெரிய ஓபனிங் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தீபாவளி நாளான ஞாயிற்றுக்கிழமைதான் இரண்டு படங்களும் வெளியாகும் என்ற எண்ணத்தை பொய்யாக்கும் வகையில், இரண்டு படங்களுமே அக்டோபர் 25ஆம் (வெள்ளிக்கிழமை) தேதியே வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.
முன்னதாக மாலை 5 மணி அளவில் ‘கைதி’ படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அறிவித்த நிலையில், அதனைத் தொடர்ந்து 6 மணிக்கு ‘பிகில்’ படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்தார் அர்ச்சனா கல்பாத்தி. இரண்டு படங்களுமே ஒரே நாளில் ரிலீஸ் ஆகும்பட்சத்தில் எந்தப்படத்திற்கு எத்தனை திரையரங்குகள் கிடைக்கும் என வரும் நாட்களில்தான் தெரியவரும்.
#Karthi #Kaithi #Vijay #BigilFromOct25th #KaithiFromOct25th #AGSEntertainment #DreamWarriorPictures #VivekanandaPictures #ArchanaKalpathi #SRPrabhu #Bigil #ARRahman #SamCS #BigilDiwali #KaithiDiwali
அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’மாஃபியா’. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே,...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ்,...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனமும் ‘விவேகானந்தா...