‘நடிகையர் திலகம்’ படத்திற்காக தேசிய விருதை வென்று தமிழ் சினிமாவிற்குப் பெருமை சேர்த்த நடிகை கீர்த்தி சுரேஷின் அடுத்த படத்திற்காக தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில், இன்று அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்ளுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக அமைந்திருக்கிறது கீர்த்தி சுரேஷின் புதிய பட ஃபர்ஸ்ட் லுக் அறிமுகம். ஆம்... கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ்’ தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘பென்குயின்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்தான் இன்று வெளியாகியுள்ளது.
‘பேஸன் ஸ்டுடியோஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த எமோஷனல் மிஸ்ட்ரி த்ரில்லர் படத்தை அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்குகிறார். நாயகியை மையமாக வைத்து உருவாகிவரும் ‘பென்குயின்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணிப் பெண்ணாக இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டிருபப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழ், தெலுங்கு என நேரத்தில் இருமொழிகளில் உருவாகும் இப்படத்தை 2020 சம்மருக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
#KarthikSubbaraj #KeerthySuresh #Penquin #HBDKeerthySuresh #Penguin #StoneBenchCreations #PassionStudios #EashvarKarthic #KharthickPalani #AnilKrish #SanthoshNarayanan #PenguinFromSummer2020
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, மலையாள...
தமிழ் சினிமாவில் தரமான படைப்புகளை தயாரித்து வழங்கும் நிறுவனங்களில் ஒன்று சசிகாந்தின் ‘Y NOT STUDIOS....
‘மைதான்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரியாக இருந்த கீர்த்தி சுரேஷிற்கு கடைசி நேரத்தில் அந்த...