‘விக்ரம் 58’ல் ‘கேஜிஎஃப்’ நாயகி!

விக்ரம் படத்தின் நாயகியான ‘கேஜிஎஃப்’ ஸ்ரீநிதி ஷெட்டி!

செய்திகள் 17-Oct-2019 2:08 PM IST Chandru கருத்துக்கள்

டிமான்ட்டி காலனி, இமைக்கா நொடிகள் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கவிருக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார் ‘சியான்’ விக்ரம். இப்படத்தை லலித் குமாரின் ‘செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ’ நிறுவனமும், ‘வயாகாம் 18 ஸ்டுடியோஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த த்ரில்லர் படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதானும் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வைரலானது. அதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தில் இன்னொரு பிரபலம் இணைந்திருக்கும் செய்தி ரசிகர்களுக்கு ஷாக் சர்ப்ரைஸாக அமைந்திருக்கிறது.
தென்னிந்திய சினிமாவை ஒரு கலக்கு கலக்கிய ‘கேஜிஎஃப்’ படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி ‘விக்ரம் 58’ படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் நேரடியாகக் களமிறங்குகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தை 2020 கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

#SrinidhiShetty #Vikram58 #AjayGnanamuthu #ARRahman #ChiyaanVikram #IrfanPathan #SevenScreenStudio

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடாரம் கொண்டான் - ட்ரைலர்


;