மணிரத்னம் படத்திற்காக பதிவான பாடல்!

‘வானம் கொட்டட்டும்’ படத்திற்காக சித் ஸ்ரீராம் இசையில் சக்திஸ்ரீ கோபாலன் பாடிய பாடல்!

செய்திகள் 16-Oct-2019 11:09 AM IST Top 10 கருத்துக்கள்

மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனமும், ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் ’வானம் கொட்டட்டும்’. இந்த படத்தின் கதை, வசனத்தை மணிரத்னம் எழுத, மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்தவரும் ‘படை வீரன்’ படத்தை இயக்கியவருமான தனசேகரன் இப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்க, இவருடன் மடோனா செபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ், சரத்குமார், ராதிகா சரத்குமார், சாந்தனு உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்ற ஜூலை மாதம் துவங்கியது. இந்த படத்தின் மூலம் இசை அமைப்பாளராகவும் அறிமுகமாகிறார் பின்னணிப் பாடகர் சித் ஸ்ரீராம். இந்நிலையில் சித் ஸ்ரீராமுடன் பின்னணிப் பாடகி சக்திஸ்ரீ கோபாலன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாம்கிராம் பக்கத்தில் வெளியிட்டு, ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் முதல் பாடல் தற்போது பதிவு செய்யப்பட்டது. சித் ஸ்ரீராம் இசையில் பாடலை பாடியதில் மகிழ்ச்சி’’ என்று பதிவிட்டுள்ளார். விறுவிறுப்பாக படப்பிடிப்பு வேலைகள் நடந்து வரும் இப்படத்திற்கு ப்ரீத்தா விஜய்குமர் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி படத்தொகுபு செய்கிறார்.

#Anthony #PreethaJayaraman #VaanamKottattum #Dhana #SidSriram #ShakthisreeGopalan #MadrasTalkies #ManiRatnam #AishwaryaRajesh #VikramPrabhu #MadonnaSebastian #RadhikaaSarathkumar #SarathKumar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பேரன்பு ட்ரைலர்


;