‘பல்லாட் கொக்காட் ஃபிலிம் ஹவுஸ்’ நிறுவனம் சார்பில் மலையாள திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்களான சோமன் பல்லாட், மற்றும் தாமஸ் கொக்காட் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ராஜாவுக்கு செக்’. ‘ஜெயம்’ ரவி, ஸ்ரேயா நடிப்பில் வெளியான ‘மழை’ படத்தை இயக்கிய சாய் ராஜ்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் சேரன் கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் சிருஷ்டி டாங்கே, சரயூ மோகன், நந்தனா வர்மா ஆகியோரும் நடிக்க, விஜய் டிவி புகழ் இர்பான் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் எம்எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். ‘குற்றம் கடிதல்’, ‘ஹவுஸ் ஓனர்’ ஆகிய படங்களில் எடிட்டிட்டராக பணிபுரிந்த பிரேம் இந்த படத்தின் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். ஆக்ஷன் காட்சிகளை டேஞ்சர் மணி வடிவமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது படத்தில் கதாநாயகனாக நடிக்கும் சேரன் பேசும்போது,
‘‘இந்த படம் குடும்பத்திற்கான த்ரில்லர் படமாக அமைந்துள்ளது. உங்கள் வீட்டில் பெண் குழந்தை இருந்தால் இந்த படத்தை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும். அவர்களையும் அழைத்து வந்து இந்த படத்தை காட்ட வேண்டும்.. அது அவர்களுக்கு ஒரு பத்து புத்தகங்களை கொடுத்து படிக்கச் சொன்னதற்கு சமமாக இருக்கும். இந்த வாழ்க்கை சூழலில், இன்றுள்ள சமூகத்தில் எந்த மாதிரியான வாழ்க்கையில் நாம் இருக்கிறோம், நமக்கான அபாயங்களும் நமக்கான பிரச்சனைகளும் நம் கூடவே நடந்து வந்து கொண்டிருக்கின்றன, அப்படிப்பட்ட சூழலில் பெண் குழந்தைகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதை சொல்லும் படம் இது.
அதே நேரம் நாம் எந்த தருணத்தில் அப்பாவாக உணர்கிறோம் என்பதை இப்படம் அழகாக சொல்கிறது. நான் பல தருணங்களில் என்னை ஒரு அப்பாவாக உணர்ந்திருக்கிறேன். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது கூட அங்கே ஒரு அப்பாவாக வாழ வேண்டிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதிலும் நான் என்னுடைய உண்மையாக, நேர்மையாக என் மகளை பார்ப்பதுபோல அவரைப் பார்த்துக்கொண்டேன். அதில் எந்த பாசாங்கும் இல்லை. அந்த விளையாட்டிற்காக அப்படி நடிக்க வேண்டிய அவசியமும் எனக்கு ஏற்படவில்லை. அந்த பாசத்தை நான் பொய்யாக காட்டினால், இந்த உலகத்தில் வாழ்வதற்கே எனக்கு அருகதை கிடையாது’’ என்றார் சேரன்!
சென்சாரில் U/A சர்டிஃபிக்கெட் கிடைத்துள்ள ‘ராஜாவுக்கு செக்’ விரைவில் வெளியாக இருக்கிறது.
#RajavukkuCheck #Cheran #RajavukkuCheckGetsUACensor #Irfan #SaiRajKumar #Mazhai #PallatteKokkattFilmHouse #BiggBoss3 #RajavukkuCheckAudioLaunch #SrushtiDange #Sarayu #NandanaVarma
அஜய் ஞானமுத்து இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கும் படம் ‘கோப்ரா’. விக்ரமின் 58-வது படமாக உருவாகி...
‘டிமாண்டி காலனி, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்களை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கும் படத்தில் விக்ரம்...
‘டிமாண்டி காலனி, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும்...