GK சினிமாஸில் மீண்டும் ‘ராட்சசி’

ஜோதிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு போரூர் GK சினிமாஸில் மீண்டும் திரையிடப்படும் ‘ராட்சசி’

செய்திகள் 15-Oct-2019 12:16 PM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் S.Y.கௌதம் ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிக்க, சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘ராட்சசி’. ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்த இப்படம், அரசாங்க பள்ளிகளோட தரம் உயரணும், அரசு பள்ளிகளில் படிக்கின்ற மாணவ மாணவிகளின் கல்வி தரம் உயரணும் என்கிற கருத்தை தாங்கி வந்திருந்தது. இதனால் இந்த படத்திற்கு பல்வேறு அமைப்புகளிடமிருந்து நல்ல வரவேற்பும் பாராட்டுக்களும் கிடைத்தது. இந்த படத்தில் ஜோதிகா அரசுப் பள்ளி டீச்சராக நடிக்க, அவருடன் பூர்ணிமா பாக்யராஜ், ஹரீஷ் பேரடி, சத்யன் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் ஜோதிகாவின் ‘ராட்சசி’ படத்தை பெரிய திரையில் மீண்டும் ரசிகர்கள் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பை சென்னை போரூரிலுள்ள ஜி.கே.சினிமாஸ் ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 18, ஜோதிகாவின் பிறந்த நாள்! அன்று GK சினிமாஸில் மாலை 6.30 மணிக்கு ‘ராட்சசி’ படத்தை சிறப்பு காட்சியாக திரையிட இருக்கிறது. இதற்கான டிக்கெட் முன் பதிவும் தொடங்கியுள்ளது. அறிமுக இயக்குனர் S.Y.கௌதம் ராஜ் இயக்கிய இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

#Jyotika #Raatchasi #RaatchasiAtGKCinemas #SeanRoldan #GokulBenoy #PhilominRaj #RaatchasiAt630PMInGKCinemas #SyGowthamRaj #DreamWarriorPictures

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாஃபியா - டீஸர்


;