சந்தானத்துடன் கை கோர்க்கும், யுவன், ஹர்பஜன் சிங்!

சந்தானத்தின் ’ டிக்கிலோனா’வில் இணைந்த யுவன் சங்கர் ராஜா, ஹர்பஜன் சிங்!

செய்திகள் 15-Oct-2019 11:34 AM IST VRC கருத்துக்கள்

‘அறம், குலேபகாவலி, ஐரா ஆகிய படங்களை தயரித்த ‘கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ்’ கோட்டபடி ராஜேஷ் தயாரித்து வரும் படம் ‘டிக்கிலோனா’. இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்றும் இந்த படத்தின் தயாரிப்பில் ராஜேஷுடன் இயக்குனர் சினீஷும் கை கோர்க்கிறார் என்றும் தகவலை சமீபத்தில் வெளியிட்டிருந்தோம். கார்த்திக் யோகி இயக்கி வரும் இந்த படத்தில் சந்தானத்துடன் ஒரு முக்கிய கேரக்டரில் இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளர் என்பதுடன் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார் என்ற தகவலையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

‘டிக்கிலோனா’ என்ற தலைப்பும், முதன்முதலாக சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்பதும் எப்படி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோ அதேபோல் இப்படத்தில் இப்போது யுவங்சங்கர் ராஜாவும், ஹர்பஜன் சிங்கும் இணைந்திருப்பதன் மூலம் இப்படம் மேலும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளது.
சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெறுகிறது என்றும் இந்த படம் 2020 ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

#Dikkiloona #Santhanam #KarthikYogi #SinishKS #SoldiersFactory #HarbajanSingh #YuvanShankarRaja #Rajesh #KJRStudios

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

A1 டீஸர் 2


;