‘விக்ரம்-58’ படத்தில் இணைந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் நடிக்கிறார்.

செய்திகள் 15-Oct-2019 11:06 AM IST Top 10 கருத்துக்கள்

‘டிமாண்டி காலனி, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்களை இயக்கிய அஜய்ஞான முத்து இப்போது விக்ரம் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். தற்காலிகமாக ‘விக்ரம்-58’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை லலித்குமாரின் ‘7 ஸ்கிரீன் ஸ்டூடியோ’ நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகிறது. பிரம்மாண்ட ஆக்‌ஷன், த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் இப்போது பிரபல கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 2006-ஆம் ஆண்டு , லாகூர் நகரத்தில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களை வீழ்த்தி, ஹாட்ரிக் எடுத்து சாதனை புரிந்தவர் இர்பான் என்பது குறிப்பிடத்தக்கது. மிகத் திறமையான நடிகரான விக்ரம், வெற்றிப் பட இயக்குனரான அஜய்ஞானமுத்து, இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருடன் இப்போது இப்படத்தில் இர்பான் பதானும் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகமாகியுள்ளது. இந்த படத்தின் காட்சிகள் இந்தியா தவிர வெளிநாடுகளிலும் படமாக உள்ளது.

#Vikram #AjayGnanamuthu #Vikram58 #Viacom18Studios #SevenScreenStudio #CricketerIrfanPathan #Dikkiloona #KarthikYogi #Santhanam #HarbajanSingh #SoldiersFactory #Sinish

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆதித்ய வர்மா ட்ரைலர்


;