மம்முட்டியின் ‘மாமாங்க’த்தில் இணைந்த இயக்குனர் ராம்!

மம்முட்டி நடிக்கும் ‘மாமாங்கம்’ படத்தின் தமிழ் பதிப்பில் மம்முட்டிக்கு தமிழ் டப்பிங்கில் உதவி செய்த இயக்குனர் ராம்!

செய்திகள் 14-Oct-2019 3:44 PM IST Top 10 கருத்துக்கள்

மம்முட்டி நடித்து வரும் படம் ‘மாமாங்கம்’. மலையாளத்தில் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்த ‘ஜோசஃப்’ படம் உட்பட பல படங்களை இயக்கிய M.பத்மகுமார் இயக்கி வரும் இந்த படம் பீரியட் டிராமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் மம்முட்டியுடன் பிரபல பாலிவுட் நடிகை Prachi Tehlan கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் உன்னிமுகுந்தன், மோகன் சர்மா, அனுசித்தாரா உட்பட பலர் நடிக்கிறார்கள். மம்முட்டி நடிப்பில் வெளியான ‘பழசிராஜா’ படம் போன்று சரித்திர கதை பின்னணியில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து இப்போது படத்தின் இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படம் அடுத்த மாதம் (நவம்பர்) 21-ஆம் தேதி வெளியாகிறது. எல்லா மொழிகளிலும் மம்முட்டியே தனது கதாபாத்திரத்திற்கான டப்பிங் பேசுகிறார். இந்நிலையில் தமிழில் வெளியாக இருக்கும் ‘மாமாங்கம்’ படத்திற்கான டப்பிங் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வர, மம்முட்டி தமிழில் டப்பிங் பேசுவதற்கு உதவி செய்ய இயக்குனர் ராம் கேளாவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இப்போது ராம் மேற்பார்வையில் ‘மாமாங்கம்’ படத்திற்கான டப்பிங்கை பேசி வருகிறார் மம்முட்டி!

‘பேரன்பு’ படத்தின் மூலம் பேரன்பு கொண்ட நண்பர்களானவர்கள் இயக்குனர் ராமும் மம்முட்டியும்! இயக்குனர் ராமின் பேரன்பு இப்போது மம்முட்டி நடிக்கும் ‘மாமாங்கம்’ படத்திலும் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

#Mammootty #Peranbu #DirectoRam #Pazhassi #Joseph #MPadmakumar #PrachiTehlan #UnniMukundan #MohanSharma #AnuSithara #Mammookka

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைக்கோ ட்ரைலர்


;