அதர்வாவை தொடர்ந்து ரியோ ராஜ்!

பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிக்கும் படம்!

செய்திகள் 14-Oct-2019 2:08 PM IST Top 10 கருத்துக்கள்

அதர்வாவை நடிக்க வைத்து ‘பாணா காத்தாடி’, ‘செம போத ஆகாதே’ ஆகிய படங்கலை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் அடுத்து இயகும் படத்தில் ‘நெஞ்சம் உணடு நேர்மையுண்டு ஓடு ராஜா’வில் கதையின் நாயகனாக நடித்த ரியோ ராஜ் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 17-ஆம் தேதி துவங்க இருக்கிறது என்றும் இந்த படம் டிராவல் ஸ்டோரியாக உருவாகிறது என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் ரியோ ராஜுக்கு ஜோடியாக நடிக்க ரம்யா நம்பீசன் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. டிராவல் ஸ்டோரியாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி கொடைக்கானல், கேரளா, குஜராத், சிக்கீம் ஆகிய இடங்களிலும் நடைபெறவிருக்கிறது. இந்த படத்தில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசனுடன் பாலசரவணன், ரோபோ சங்கர், முனீஸ்காந்த், விஜி, சந்தானபாரதி, ‘ஆடுகளம்’ நரேன், ரேகா, லிவிங்ஸ்டன், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள்! அதர்வாவை தொடர்ந்து ரியோ ராஜை கதாநாயகனாக நடிக்க வைத்து பத்ரி வெங்கடேஷ் இயக்கும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#Atharvaa #BadriVenkatesh #RioRaj #RemyaNambeesan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - ட்ரைலர்


;