பெட்ரோமாக்ஸ் – விமர்சனம்

லாஜிக்கே இல்லாத பேய், காமெடி படம்!

விமர்சனம் 12-Oct-2019 3:15 PM IST Top 10 கருத்துக்கள்

‘Petromax’ Movie Review!

Direction: Rohin Venkatesan

Production: Eagle's Eye Production

Cast: Tamannaah, Yogi Babu, Munishkanth

Kaali Venkat, Sathyan Mime Gopi & Prem

Music: Ghibran

Cinematography: Dani Raymond

Editor: Leo John Paul
டாப்சி நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘அனந்தோ பிரம்மா’ தமிழில் தமனா நடிப்பில் ‘பெட்ரோமாக்ஸா’க உருவாகியுள்ளது. ‘அதே கண்கள்’ படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘பெட்ரோமாக்ஸ்’ எப்படி?

கதைக்களம்

மலேசியாவில் வேலை செய்யும் பிரேம் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் தனது தாய் தந்தையரை இழந்ததாக சொல்லி மணிமங்கலத்தில் உள்ள தனது வீட்டை விற்க முயற்சிக்கிறார். ஆனால் ஆந்த வீட்டை விற்க பிரேமுக்கு உதவுவர்களும், அந்த வீட்டை வாங்க வருபவர்களும் அந்த வீட்டில் பேய் இருப்பதாக சொல்லி அந்த முயற்சியிலிருந்து பின் வாங்குகிறார்கள். இந்நிலையில் தன் பணத் தேவைக்காக அந்த வீட்டில் பேய் இல்லை என்று நிரூபித்து அந்த வீட்டை விற்க பிரேமுக்கு உதவ முன் வருகிறார் முனீஸ்காந்த்! அந்த வீட்டில் பேய் இல்லை என்பதை நிரூபிக்க முனீஸ்காந்த் தன்னைபோலவே பணத் தேவையுள்ள நண்பர்களான காளி வெங்கட், சத்யன், TSK ஆகியோருடன் அந்த வீட்டில் நான்கு நாட்கள் தங்க செல்கிறார்கள். அப்போது அந்த வீட்டில் பேய்களாக சுற்றித் திரியும் தமன்னா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், குழந்தை மோனிகா மற்றும் ஒருவர் இவர்களை விரட்டி அடிக்கும்போது நிகழும் கலகலப்பு சம்பவங்களும் அதனை தொடர்ந்து ஃப்ளாஷ் பேக்கில் வரும் நெகிழ்ச்சியான சம்பவங்களுமே ‘பெட்ரோமாக்ஸ்’.

படம் பற்றிய அலசல்

முதலில் கேஷுவலாக ஆரம்பிக்கும் படம் இடைவெளை வரை சொல்லும்படியாக எந்த சுவாரஸ்ய விஷயங்களும் இல்லாமலேயே பயணிக்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் பேய் இல்லை என்று நிரூபிக்க அந்த வீட்டிற்குள் தங்க வரும் முனீஸ்காந்த், காளிவெங்கட், சத்யன், TSK ஆகியோரின் எண்ட்ரியிலிருந்து படம் காமெடியும் திகிலுமாக களைக்கட்டி ரசிக்க வைக்கிறது. இவர்களது களேபரங்கள் போதாதென்று அந்த வீட்டிற்குள் நுழையும் யோகி பாபுவின் அட்ராசிட்டிகள் வேறு….

எந்த லாஜிக் விஷயங்களையும் கவனத்தில் கொள்ளாமல் படம் பார்க்க வருபவர்களை சிரிக்க வைத்து அனுப்பினால் போதும் என்ற முடிவோடு இந்த படத்தை இயக்கியிருக்கும் ரோஹின் வெங்கடேசன் தமன்னா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், குழந்தை மோனிகா மற்றும் பிரேம் சம்பந்தப்பட்ட ப்ளாஷ் காட்சிகளை செண்டிமெண்ட் ரகமாக வழங்கியும் ரசிக்க வைத்துள்ளார். ஜிப்ரானின் பின்னணி இசை, டானி ரேமண்டின் ஒளிப்பதிவு ஆகிய டெக்னிகல் விஷயங்கள் ‘பெட்ரோமாக்ஸ்’ படத்தின் கதையோட்டத்திற்கு பலம் சேர்த்துள்ளது . ஆனால் படத்தொகுப்பு செய்துள்ள லியோ ஜான் பால் முதல்பாதி திரைக்கதையை விறுவிறுப்பாக்கி சுவாரஸ்யப்படுத்துவதில் போதுமான கவனம் செலுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும்.

நடிகர்களின் பங்களிப்பு

இந்த கதையில் பேயாக வரும் தமன்னா கேரக்டருக்கு அவ்வளவு முக்கியத்துவம் தரப்படவில்லை. இருந்தாலும் தமன்னா வரும் காட்சிகளில் அவரை ரசித்துக்கொண்டே இருக்கலாம் என்கிறவிதமாக அவரது தோற்றமும் நடிப்பும் அமைந்துள்ளது. படத்தை தாங்கி பிடித்திருப்பதில் முனீஸ்காந்த், காளிவெங்கட், சத்யன், TSK, யோகி பாபு ஏற்ற கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களது நடிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது! பிரேம் ஆடும் கபட ஆட்டத்துக்கு துணை போகுபவராக வரும் மைம் கோபி மற்றும் பிரேமின் அப்பாவாக வரும் கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், தாயாக வரும் ஸ்ரீஜா ரவி ஆகியோருடன் படத்தில் லிவிங்ஸ்டன், மகாந்தி சங்கர், மைனா நந்தினி ஆகியோரும் நடித்துள்ளனர். அனைவரும் தங்களது கதாபாத்திரங்களின் தன்மையை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

பலம்

1. இரண்டாம் பாதி காமெடி காட்சிகள்

2. ஃப்ளாஷ் பேக்கில் வரும் சென்டிமெண்ட் விஷயங்கள்…

3. பின்னணி இசை, ஒளிப்பதிவு.

பலவீனம்

1.முதல் பாதி

2.கொஞ்சம் கூட லாஜிக் விஷயங்களை பின் பற்றாதாது…

மொத்தத்தில்…

லாஜிக் விஷயங்கள எல்லாம் கருத்தில் கொள்ளாமல் கொஞ்ச நேரம் சிரித்துவிட்டு வரலாம் என்று விரும்புபவர்கள் ‘பெட்ரோமாக்ஸு’க்கு டிக்கெட் எடுக்கலாம்!ஒருவரி பஞ்ச் : லாஜிக்கே இல்லாத பேய், காமெடி படம்!

ரேட்டிங் : 4/10

#Tamannaah #Petromax #YogiBabu #Munishkanth #EaglesEyeProduction #RohinVenkatesan #Ghibran #PetromaxMovieReview

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;