கிரிக்கெட் விளையாட்டு வீரர் ஸ்ரீசாந்துடன் இணையும் ஹன்சிகா!

ஹரி - ஹரீஷ் இயக்கத்தில் ஹன்சிகா, கிரிக்கெட் விளையாட்டு வீரர் ஸ்ரீசாந்த் நடிக்கும் படம்!

செய்திகள் 11-Oct-2019 11:16 AM IST VRC கருத்துக்கள்

சமீபகாலமாக நயன்தாரா, த்ரிஷா, அமலாபால் உட்பட்ட பெரும்பாலான ஹீரோயின்கள் கதையில் முக்கியத்துவமுள்ள கேரக்டர்கள் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வரிசையில் இப்போது இனைந்துள்ள இன்னொரு நடிகை ஹன்சிகா. இவர் முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையை கொண்ட ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை சமீபத்தில் ‘யோகி’ பாபு நடிப்பில் வெளியான ‘தர்மபிரபு’ படத்தை தயாரித்த ‘ஸ்ரீவாரி ஃபிலிம்ஸ்’ பி.ரங்கநாதன் தயாரிக்கிறார். ஹாரர், காமெடி, பேய்ப்படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் ஒரு முக்கியமான நெகட்டீவ் கேரக்டரில் பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரரான ஸ்ரீசாந்தும் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்த படத்தை இரட்டை இயக்குனர்களான ஹரி - ஹரீஷ் இயக்குகிறார்கள். இவர்கள் ஏற்கெனவே ‘அம்புலி’, ‘அ’, ‘ஜம்புலிங்கம்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்கள். இவர்கள் இயக்கத்தில் ஹன்சிகா, ஸ்ரீசாந்த் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கி 2020 கோடை விடுமுறையில் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

100 ட்ரைலர்


;