கண் பார்வை இல்லாத இசை கலைஞராக மாதவன்!

வாய் பேச முடியாத, காது கேளாதவராக அனுஷ்காவும், கண்பார்வை இல்லாதவராக மாதவனும் இணைந்து நடிக்கும் படம் ‘நிசப்தம்’

செய்திகள் 10-Oct-2019 11:39 AM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் வெளியான ‘சைரா நரசிம்மா ரெட்ட்டி’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த அனுஷ்கா இப்போது நடித்து வரும் படம் ‘நிசப்தம்’. பிரபல தெலுங்கு பட இயக்குனர் ஹேமந்த் மதுகர் இயக்கும் இந்த படத்தில் அனுஷ்காவுடன் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். சுந்தர்.சி.இயக்கத்தில் ‘ரெண்டு’ படத்தில் இணைந்து நடித்த மாதவனும், அனுஷ்காவும் மீண்டும் இணைந்து நடிக்கும் இந்த ‘நிசப்தம்’ படத்தில் அனுஷ்கா வாய் பேச முடியாத, காது கேளாத ஓவியம் வரையும் பெண்ணாகவும் மாதவன் கண் பார்வையற்ற இசை கலைஞராகவும் நடிக்கிறர் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

‘People Media Factory’ மற்றும் ‘Kona Film Corporation’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. பிரபல மலையாள திரைப்பட இசை அமைப்பாளர் கோபி சுந்தர் இசை அமைக்கும் இந்த படம் வசனங்கள் இல்லாமல் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது என்றும் சொல்லப்படுகிறது.



#AnushkaShetty #Sweety #Nishabdham #Silence #Madhavan #Anjali #ShaliniPandey #AlexTerzieff #HemanthMadhukar #GopiSunder #ShaneilDeo #PrawinPudi #ChadRaptor #NeerajaKona #KonaVenkat #PeopleMediaFactory #KonaFilmCorporation

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;