எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் மீண்டும் இணையும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

செய்திகள் 9-Oct-2019 12:57 PM IST Top 10 கருத்துக்கள்

ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா ஒரு படத்தில் நடிக்கிறார் என்றும் இந்த படத்தை ‘ஏஞ்சல்ஸ் ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் சார்பில் எஸ்.ஜே.சூர்யாவே தயாரிக்க இப்படத்தில் ‘மான்ஸ்டர்’ படத்திற்கு பிறகு மீண்டும் பிரியா பவானி சங்கர் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து நடிக்கிறார் என்றும் தகவலை சமீபத்தில் வெளியிட்டிருந்தோம். சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 9-ஆம் தேதி துவங்கும் இன்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்த படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்கத்தை கதிர் கவனிக்க, ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். 2020 ஃபிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியிட திட்டமிட்டுள்ள இப்படம் முற்றிலும் புதிய பாணியில் காதல் கதையாக உருவாகி வருகிறது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;