தமிழ் சினிமாவின் வழக்கமான சில விஷயங்களை உடைத்த படம் ‘கைதி’

ஹீரோயின், கமர்ஷியல் விஷயங்கள் இல்லாத படம் ‘கைதி’ – இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

செய்திகள் 9-Oct-2019 11:47 AM IST Top 10 கருத்துக்கள்

‘மாநகரம்’ படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘கைதி’. பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்து வழங்கிய ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனத்துடன் ‘விவேகானந்தா பிக்சர்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் கார்த்தி கதையின் நாயகனாக நடிக்க, நரேன், மரியாம் ஜார்ஜ், ரமணா உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளர். தீபாவளிக்கு வெளியாக இருக்கும் ‘கைதி’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று முன் தினம் ஆயுதபூஜையன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது ‘கைதி’யை இயக்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ் பேசும்போது,

‘‘கைதி’ எனக்கு இரண்டாவது படம். இந்தப் படம் உருவாக முழுக் காரணம் எஸ்.ஆர். பிரபு அவர்கள்தான்! ஹீரோயின் இல்லாமல், கமர்ஷியல் விஷயங்கள் இல்லாமல் எப்படி படம் பண்ணுவீர்கள் என்று நிறைய பேர் கேட்டார்கள். தமிழ் சினிமாவில் இந்த விஷயத்தை உடைக்க முடியாதோ என்று நினைத்தேன். ஆனால், கார்த்தி சார் ‘கைதி’ கதையை கேட்டவுடன் ஷூட்டிங் போகலாம் என்று சொன்னார். அவர் அப்படி சொன்னதும் எனக்கு மேலும் தைரியம் வந்தது. ‘கைதி’ இவ்வளவு பெரிய படமாக உருவாக கார்த்தி சார் தான் முக்கிய காரணம்!

‘கைதி’ குறுகிய காலகட்டத்தில எடுத்த படம். இந்தப் படத்தில் உழைத்த எல்லோரும் மிகப் பெரிய பங்களிப்பு செய்திருக்கிறார்கள். என் உதவி இயக்குநர்கள் எல்லோரும் இரவு பகல் பாராமல் உழைச்சிருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்களுக்கு மாறுபட்ட ஒரு தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸாக இருக்கும்’’ என்றார் இப்போது விஜய் நடிப்பில் தனது மூன்றாவது படத்தை இயக்கி வரும் லேகேஷ் கனகராஜ்!

#Karthi #Kaithi #LokeshKanagaraj #DreamWarriorPictures #SRPrabhu #SRPrakashBabu #VivekandaPictures #SamCS #SathyanSooryan #PhilominRaj ##KaithiTrailerLaunch #KaithiTrailer #KaithiFromDiwali

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கைதி ட்ரைலர்


;