100% காதல் - விமர்சனம்

20% சுவாரஸ்யம், 80% சொதப்பல்!

விமர்சனம் 5-Oct-2019 11:56 AM IST Top 10 கருத்துக்கள்

Direction: M. M. Chandramouli
Production: Creative Cinemas NY & NJ Entertainment
Cast: GV Prakash Kumar, Shalini Pandey, Nassar, Thambi Ramaiah, Thalaivasal Vijay, Rekha & Jayachitra
Music: GV Prakash Kumar
Cinematography: Ganesh Rajavelu
Editor: Mu. Kasi Viswanathan

நாகசைதன்யா, தமன்னா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி ஹிட்டடித்த ‘100% LOVE’ படத்தின் ரீ-மேக்காக உருவாகியுள்ள படம் ‘100% காதல்’. ஜி.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியாகியுள்ள இப்படத்தில் காதல் கெமிஸ்ட்ரி ‘ஒர்க்-அவுட்’ ஆகியுள்ளதா?

கதைக்களம்

படிப்பு உட்பட எதிலும் நம்பர் ஒன்னாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறவர் ஜி.வி.பிரகாஷ். அவருடைய அத்தைப் பெண் ஷாலினி பாண்டே ஜி.வி.பிரகாஷ் வீட்டில் தங்கி படிக்கிறார். இருவரும் ஒருவர் ஒருவரை விரும்புவது வெளிகாட்டாமல் ஒரே வகுப்பில் படித்து வரும் நிலையில், ஜி.வி.பிரகாஷை மிஞ்சி படிப்பில் முதல் இடைத்தை பிடிக்கிறார் பிடிக்கிறார் ஷாலினி பாண்டே! இதனால் ஜி.வி.பிரகாஷுக்கு பெரும் ஈகோ உருவாகி விடுகிறது. இந்நிலையில் அதே கல்லூரியில் படிக்கும் யுவன் மயில்சாமி படிப்பில் முதல் இடைத்தை பிடித்து இருவரையும் பின்னுக்கு தள்ளுவதோடு, ஜீ.வி. பிரகாஷ் மிகவும் விரும்பும் ஷாலினி பாண்டே மனதிலும் இடம் பிடித்து விடுகிறார் யுவன் மயில்சாமி! அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் ‘100% காதல்’ படத்தின் கதைக்களம்!

படம் பற்றிய அலசல்!

அந்த காலத்திலிருந்து பல படங்களில் சொல்லப்பட்ட காதலர்களின் ஈகோ மோதலை சொல்லும் படமே இந்த ‘100% காதல்’. காதலர்களுக்குள் நான் என்கிற முனைப்பு இருந்தால் பிரச்சனைகள் தான் உருவாகும் என்ற கருத்தைச் சொல்ல வந்துள்ள இயக்குனர் சந்திரமௌலி திரைக்கதையை ரசிக்கும்படி சொல்வதில் தடுமாறி இருக்கிறார். அதே நேரம் படத்தில் கதைக்கு தேவையில்லாத ஏகபட்ட கேரக்டர்கள்… உதாரணமாக ஜி.வி.பிரகாஷ் வீட்டில் இருக்கும் ஆறு குழந்தைகள்! அவர்கள் யார் எதற்காக அங்கே இருக்கிறார்கள் என்பதை சொல்லவில்லை. இதுபோன்ற விஷங்களால் படத்தின் 80% காட்சிகளும் சொதப்பலாகவே அமைந்துள்ளது.

ஜி.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே-க்கு இடையிலான சில ரொமான்ஸ் காட்சிகள் ரசிக்க வைக்கிறது! மற்றபடி படத்தில் சொல்லும்படி எந்த சுவாரஸ்ய விஷயங்களும் இல்லை.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை, ஆர்.கணேஷின் ஒளிப்பதிவு, மு.காசிவிஸ்வநாதனின் படத்தொகுப்பு ஆகிய தொழில்நுட்ப விஷயங்கள் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது என்றாலும் சுவார்ஸயமில்லாத திரைக்கதையால் இவர்களது பங்களிப்பு எடுபடவில்லை.

நடிகர்களின் பங்களிப்பு

எதிலும் ஸ்ட்ரிக்டானவாராக வரும் ஜி.வி.பிரகாஷ் அலட்டல், உருட்டல் இல்லாமல் யதார்த்தமாக நடித்து தனது கதாபாத்திரத்தை சிறப்பித்துள்ளார். ஷாலினி பாண்டே தனது இடையழகை காட்டி இளைஞர்களை வசீகரிக்க முயன்றுள்ளார்! ஷாலினி நடிப்பில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும் என்பது மாதிரியே அவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது. ஜி.வி.பிரகாஷின் தாத்தாவாக நாசர், பாட்டியாக ஜெயசித்ரா, ஷாலினி பாண்டேவை விரும்பும் கல்லூரி மாணவராக யுவன் மயில்சாமி, ஜி.வி.பிரகாஷின் அப்பாவாக ‘தலைவாசல்’ விஜய், அம்மாவாக ரேகா, கல்லூரி பிரின்சிபாலாக மனோபாலா, ஷாலினி பாண்டேயின் அப்பாவாக இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் என்று படத்தில் ஏகபட்டோர் நடித்துள்ளனர்.

பலம்

1.ரொமான்ஸ் காட்சிகள்

2. அதே திரைக்கதை…

பலவீனம்

மேலே குறிப்பிட்ட விஷயங்கள் தவிர்த்து படத்தில் அனைத்தும் பலவீனமாகவே அமைந்துள்ளது!

மொத்தத்தில்…

தெலுங்கு சினிமா ரசிகர்களை கவர்ந்த இந்த கதை தமிழ் சினிமா ரசிகர்களை எந்த அளவுக்கு கவரும் என்பதை சொல்ல முடியவில்லை!

ஒருவரி பஞ்ச் : 20% சுவாரஸ்யம், 80% சொதப்பல்!

ரேட்டிங் : 3.5/10


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;