‘விஜய்-64’- டீமுக்கு நன்றி தெரிவித்த விஜய்சேதுபதி!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் இணைந்த விஜய் சேதுபதி படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்!

செய்திகள் 1-Oct-2019 3:03 PM IST Top 10 கருத்துக்கள்

‘மாநகரம்’ ‘கைதி’ ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு 3-ஆம் தேதி துவங்க இருக்கிறது என்ற தகவலை சமீபத்தில் வெளியிட்டிருந்தோம். அத்துடன் இந்த படத்தில் விஜய்சேதுபதி நடிக்க இருப்பது குறித்த அதிகாரபூர்வ தகவலை படக்குழுவினர் நேற்று மாலை வெளியிட்டனர். இந்நிலையில் ‘விஜய்-64’ படத்தில் நடிக்க இருப்பது குறித்து விஜய்சேதுபதி கருத்து தெரிவித்திருப்பதில், ‘‘தளபதி விஜய்யுடன் இணைந்து நடிப்பது பெரிய சந்தோஷம் அளிக்கிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இணைத்தயாரிப்பாளர் லலித்குமார் உட்பட்ட படக்குழுவினருக்கு நன்றி’’ என்று விஜய்சேதுபதி ட்வீட் செய்துள்ளார். இந்த படத்தை ‘XB FILM CREATORS’ என்ற நிறுவனம் சார்பில் சேவியர் பிரட்டோ தயாரிக்க, அனிருத் இசை அமைக்கிறார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை ஃபிலோமின் ராஜ் கவனிக்கிறார்.சண்டை காட்சிகளை ‘ஸ்டண்ட்’ சில்வா அமைக்க, கலை இயக்கத்தை சதீஷ் குமார் கவனிக்கிறார். இந்த படத்தின் முக்கிய தகவல்கள் இன்றும், நாளையும் வெளியாக இருக்கிறது.

#Thalapathy64 #Vijay #Anirudh #LokeshKanagaraj #SathyanSooryan #PhilominRaj #SatheeshKumar #StuntSilva #Thalapathy64ShootingStartsFromOctober3rd #VijaySethupathi #MalavikaMohanan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;