‘விசாரணை’ வரிசையில் இடம் பிடித்த ‘அசுரன்’

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடிக்கும் ‘அசுரன்’ படத்திற்கு ‘U/A’ சர்டிஃபிக்கெட்!

செய்திகள் 30-Sep-2019 5:55 PM IST Top 10 கருத்துக்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் இணைந்து நடிக்கும் படம் ‘அசுரன்’. ‘கலைப்புலி’ எஸ்.தாணுவின் வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் படம் அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ஆம் தேதி வெளியாகிறது. இதனை முன்னிட்டு இப்படத்தின் சென்சார் காட்சி சமீபத்தில் நடந்தது. ‘அசுரன்’ படத்தை பார்த்த சென்சார் குழு உறுப்பினர்கள் படத்திற்கு ‘U/A’ சர்டிஃபிக்கெட் வழங்கியுள்ள தகவலை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக பகிர்ந்துள்ளனர். வெற்றிமாறன் இயக்கத்தில் இதற்கு முன் வெளியான ‘வட சென்னை’ படத்திற்கு ‘A’ சர்டிஃபிக்கெட்டும், அதற்கு முன் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘விசாரணை’ படத்திற்கு ‘U/A’ சர்டிஃபிக்கெட்டும் கிடைத்திருந்தது. இந்நிலையில் இப்போது ‘அசுரன்’ படத்திற்கும் ‘விசாரணை’ பட வரிசையில் ‘U/A’ சர்டிஃபிக்கெட் கிடைத்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை வேல்ராஜ் கவனித்துள்ளார். இந்த படத்தில் தனுஷ், மஞ்சு வாரியாருடன் பிரகாஷ் ராஜ், ‘ராட்சசன்’ படப் புகழ் அபிராமி, இயக்குனர் பாலாஜி சக்திவேல், இயக்குனர் வெங்கடேஷ் மற்றும் டீஜே ஆகியோரும் நடித்துள்ளனர்.
#VadaChennai #Vetrimaaran #Dhanush #ManjuWarrier #GVPrakashKumar #Asuran #AsuranCensoredWithUA #AsuranFromOctober4th #PrakashRaj #BalajiSakthivel #Venkatesh #Teejay

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;