சென்னையில் துவங்கியது ‘க்’

அறிமுக இயக்குனர் பாபு தமிழ் எழுதி இயக்கும் ‘க்’ படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது!

செய்திகள் 30-Sep-2019 11:55 AM IST Top 10 கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் பாபு தமிழ் எழுதி, இயக்க, அறிமுக நாயகன் யோகேஷ், குரு சோமசுந்தரம் இருவரும் நடிக்க ‘க்’ என்ற பெயரில் ஒரு படம் உருவாகிறது என்ற தகவலை சமீபத்தில் வெளியிட்டிருந்தோம். சமீபத்தில் வெளியான ‘ஜீவி’ படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய பாபு தமிழ் எழுதி இயக்கும் இப்படம் உளவியல் ரீதியாக சிக்கி தவிக்கும் ஒரு கால்பந்தாட்ட வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் படமாகும்! இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக, ஒரு சில காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கவும் இருக்கிறது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தில் யோகேஷ், குருசோமசுந்தரத்துடன் அனிகா, விக்ரமன், ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோரும் நடிக்க, இப்படத்திற்கு ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ராகுல் படத்தொகுப்பு செய்கிறார். அவினாஷ் கவாஸ்கர் இசை அமைக்கிறார். ஃபயர் கார்த்திக் சண்டை காட்சிகளை அமைக்கிறார். கலை இயக்கத்தை கல்லை தேவா கவனிக்கிறார்.

#Jiivi #DharmarajFilms #BabuTamizh #Yogesh #Ikk #GuruSomasundaram #KSRadhakrishnan #Ragul #GavaskarAvinash

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - ட்ரைலர்


;