சூப்பர் ஸ்டார் படத்தை ரீ-மேக் செய்யும் மெகாஸ்டார்!

மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான் ‘லூசிஃபர்’ படத்தை ரீ—மேக் செய்து நடிக்கிறார் சிரஞ்சீவி!

செய்திகள் 30-Sep-2019 11:40 AM IST Top 10 கருத்துக்கள்

பிருத்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சுவாரியர், பிருத்திவிராஜ், டோவினோ தாமஸ் உட்பட பலர் நடிப்பில் வெளியாகி 150 கோடிக்கும் மேல் வசூலாகி சூப்பர் ஹிட்டான மலையாள படம் ‘லூசிஃபர்’. இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியானது. இந்த படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது என்றாலும் இந்த படத்தின் தெலுங்கு ரீ-மேக் உரிமையை தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி வாங்கியுள்ளார். இந்த தகவலை சிரஞ்சீவியே சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

சிரஞ்சீவி நடிப்பில் மிகப் பிரம்மாண்ட படமாக உருவாகியுள்ள ‘சைரா நரசிம்மா ரெட்டி’ தெலுங்கு தவிர தமிழ், மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் வெளியாகிறது. காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ஆம் தேதி இப்படம் உலகம் முழுக்க வெளியாகிறது. மலையாளத்தில் வெளியாகும் இப்படத்திற்கு மோகன்லால் வாய்ஸ் ஓவர் கொடுத்திருக்கிறார். இந்நிலையில் மலையாளத்தில் வெளியாகும் ‘சைரா நரசிம்மா ரெட்டி’யின் புரொமோஷனுக்காக கேரளா சென்ற சிரஞ்சீவி அங்கு பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் மோகன்லால் நடித்த ‘லூசிஃபர்’ படத்தை பார்த்ததும் அதனை ரீ-மேக் செய்து நடிக்க வேண்டும் என்று விரும்பி தெலுங்கு ரைட்டிஸை வாங்கினேன். இப்படத்தின் தெலுங்கு டப்பிங் வேர்ஷன் வெளியானாதால் ‘சைரா’ படத்திற்கு பிறகு ஓரிரு படங்களில் நடித்த பிறகு ‘லூசிஃபர்’ தெலுங்கு ரீ-மேக்கில் நடிக்க உள்ளதாவும் தெரிவித்த சிரஞ்சீவி, ‘லூசிஃபர்’ படத்தில் பிருத்திவி ராஜ் நடித்த கேரக்டரில் அவரே நடிக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக்கொண்டேன். ஆனால் பிருத்திவிராஜ், ‘என்னை விட தெலுங்கில் அந்த கேரட்கரில் உங்கள் மகன் ராம் சரண் நடித்தால் நன்றாக இருக்கும்’ என்று பிருத்திவிராஜ் சொன்னதாகவும் சிரஞ்சீவி பேசியிருக்கிறார்
#Lucifer #SyeRaaNarasimhaReddy #Chiranjeevi #Mohanlal #MegaStar #RamCharanTeja #Prithviraj

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைரா டீஸர்


;