கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் துவங்கியது. தொடர்ந்து லண்டனில் படப்பிடிப்பு நடந்து வரும் இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ மற்றும் கலையரசன் ஆகியோரும் நடிக்கிறார்கள் என்ற தகவலை சமீபத்தில் வெளியிட்டிருந்தோம். இப்போது இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜும் இணைந்துள்ளார். இவர் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்த ‘ஜோசஃப்’ படத்தில் ஹீரோவாக நடித்தவராவார். ஏற்கெனவே பல மலையாள படங்களில் நடித்துள்ள ஜோஜு ஜார்ஜுக்கு, ‘ஜோசஃப்’ படம் தேசிய விருது கேரள அரசாங்க விருது உட்பட பல விருதுகள் பெற்றுத்தந்தது. தமிழில் முதன் முதலாக இப்படத்தின் மூலம் அறிமுகமாகும் ஜோஜு ஜார்ஜ், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷுடன் நடிப்பதை நம்மிடம் உறுதிப்படுத்தினார். ‘ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பில் இப்போது ஜோஜு ஜார்ஜும் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்த படத்தின் ஒளிப்பதிவை ஸ்ரேயாஸ் கிருஷ்ணா கவனிக்க, சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். வினோத் ராஜ்குமார் கலை இயக்கத்தை கவனிக்க, தினேஷ் சுப்பராயன் சண்டை காட்சிகளை அமைக்கிறார்.
#Dhanush #MariSelvaraj #KalaipuliSThanu #VCreations #KarthikSubbaraj #D40 #JojuGeorge #Joshup
‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘கர்ணன்’....
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, மலையாள...
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘பட்டாஸ்’. இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ்...