சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி, நயன்தாரா, சுதீப், தமன்னா, ஜகபதி பாபு என்று பெரும் நடசத்திர பட்டாளம் நடிக்க, தெலுங்கில் உருவாகியுள்ள படம் ‘சைரா நரசிம்மா ரெட்டி’. ராயல்சீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யவலாடா நரசிம்ம ரெட்டி வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் அக்டோபர் 2-ஆம் தேதி காந்திஜெயந்தி அன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என்று பல மொழிகளில் வெளியாகிறது. சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா தயாரித்துள்ள இப்படம் 270 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை தமிழகம் முழுவதும் ஆர்.பி.சௌத்ரியின் ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் வெளியிடுகிறது. இதனை முன்னிட்டு சற்றுமுன் சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இப்படத்தின் புதிய டிரைலர் வெளியிடப்பட்டது. அப்போது இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள தமன்னா படம் குறித்து பேசுபோது,
‘‘பாகுபலி’ படத்திற்கு பிறகு இது போன்ற சரித்திர கதை அம்சம் கொண்ட படத்தில் இனி எப்போது நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது தான் இந்த படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. இந்த படம் நம் நாட்டு சுதந்திரத்துக்காக போராடிய முதல் இந்திய போராட்ட வீரர் பற்றிய சரித்திர கதை என்று சொன்னார்கள்! நான் ரொம்பவும் சந்தோஷப்பட்டேன். இதில் சிரஞ்சீவி சாருடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, சுதீப், அமிதாப்-ஜி என்று பல பெரிய ஸ்டார்கள் நடித்திருக்கிறார்கள். அவர்களுடன் இப்படத்தில் லட்சுமி என்ற கேரக்டரில் நடித்தது மறக்க முடியாதது. அதுவும் சிரஞ்சீவி சாருடன் முதன் முதலாக நடித்த அனுபவம் மறக்க முடியாதது. இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாகி மற்ற மொழிகளிலும் வெளியாகிறது. இதனை ஒரு தெலுங்கு படம் என்று சொல்ல முடியாது. இது நம் தேசத்துக்காக போராடிய ஒரு போராட்ட வீரரின் கதையாக உருவாகியிருப்பதால் இதனை நம் தேசப்பற்றை வெளிப்படுத்தும் இந்திய படம் என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தில் நடித்தது எனக்கு பெருமை! இந்த படம் ‘பாகுபலி’ படத்தை போன்று மிகப் பெரிய வெற்றிப் படமாக அமையும் என்றார் தமன்னா!
#KonidelaProductionCompany #VijaySethupathi #Nayanthara #Chiranjeevi #Tamannaah #AmitabhBachchan #AmitTrivedi #SyeRaaNarasimhaReddy #SyeRaaNarasimhaReddyFromOctober2nd
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...
ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி வந்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் அனைத்து...
அசோக் செல்வன், ரித்விகா சிங் இணைந்து நடிக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம்...