‘பார்த்திபனிடம் உதவி இயக்குனராக வேலை செய்ய ஆசை!’ – இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்

பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு சைஸ்-7’ நன்றி அறிவிப்பு விழாவில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியவை…

செய்திகள் 27-Sep-2019 8:23 PM IST Top 10 கருத்துக்கள்

பார்த்திபன் ஒற்ற ஆளாய் நடித்து, இயக்கி, தயாரித்து சென்ற 20-ஆம் தேதி வெளியான படம் ‘ஒத்த செருப்பு சைஸ்-7’. இந்த படம் வெளியான நாளிலிருந்து இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில் நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆதரவும் கிடைத்து இப்படம் வெற்றிப் படமாக அமைந்துள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், இப்படத்தில் பணியாற்றியவர்களை கௌரவிக்கும் விதமாகவும் பார்த்திப்ன இன்று இன்று ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த விழாவில் இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார், ஆர்.கே.செல்வமணி, பேரரசு, எழில், சீனுராமசாமி, ரவி மரியா, அஜயன் பாலா, சித்ரா லட்சுமணன் உட்பட பல இயக்குனர்கள் கலந்துகொண்டு பார்த்திபன் மற்றும் ‘ஒத்த செருப்பு’ படத்தில் பணியாற்றியவர்களை பாராட்டிப் பேசினர்.

அப்போது இயக்குனர் சந்திரசேகர் பேசும்போது, ‘‘பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தை பார்த்து வியந்து போனேன்! பொதுவாக எனக்கு ஒரு படம் பிடித்து விட்டால் நான் அந்த படம் சம்பந்தமான இயக்குனரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டுவேன். ரொம்பவும் மனதுக்கு பிடித்த படம், வியக்க வைத்த படம் என்றால் அந்த படத்தின் இயக்குனரை அவர் இருக்கும் இடத்திற்கு நேரில் சென்று பாராட்டுவேன். அப்படி நான் பாராட்டிய இயக்குனர்கள் கே.விஸ்வநாத், கே.பாலச்சந்தர் என்று ஒரு சிலரே இருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது ‘ஒத்த செருப்பு’ படத்தை இயக்கிய பார்த்திபன் ஒருவராகி விட்டார். பார்த்திபனை நேரில் சந்தித்து பாராட்ட வேண்டும் என்று அவர் வீட்டுக்கு சென்றேன். உணர்ச்சிவசப்பட்ட எனக்கு பேச்சே வரவில்லை. அவர் காலில் விழுந்துவிட்டேன்.

‘ஒத்த செருப்பு’ படத்தை ஒற்ற ஆளாய் இருந்து பார்த்திபன் உருவாக்கிய விதம், செதுக்கிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது, வியக்க வைத்தது. ஒரே முகத்தை இரண்டு மணிநேரம் எப்படி பார்ப்பது போரடிக்காதா என்ற கேள்வியுடன் படத்தை பார்க்கப் போனால் நமது எதிர்பார்ப்பை மீறி அவர் ஒரு புதிய முயற்சியாக ‘ஒத்த செருப்பை’ அப்படி ரசிக்க வைத்திருந்தார். படத்தில் பார்த்திபன் கிண்டல் பண்றார், அழ வைக்கிறார், சமூகத்தில் மீதிருக்கிற வெறுப்பை வெளிப்படுத்துகிறார், கோபப்படுகிறார் என்று அத்தனை உணர்வுகளையும் மிகவும் ரசிக்கும் படியும், யோசிக்க வைக்கும்படியும் வெளிப்படுத்தி இருந்தார்.

பார்த்திபன் நீங்கள் இன்னும் இதுபோன்ற பல புதிய முயற்சிகளை செய்ய வேண்டும்! என்னை போன்றவர்கள் உங்களிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது! உங்களிடம் ஒன்றை மட்டும் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் அடுத்த படத்தில் என்னை உதவி இயக்குனராக சேர்த்துக் கொள்ளுங்கள்! உங்களிடம் ஒரு படத்திலாவது உதவி இயக்குனராக வேலை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனது ஆசையை நிறைவேற்றி வையுங்கள் பார்த்திபன்! எனக்கு கமர்ஷியல் படங்களை எடுக்க மட்டும்தான் தெரியும். இதுபோன்ற படங்களை எல்லாம் எடுக்க எனக்குத் தெரியாது’’ என்றார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்!

இதனை தொடர்ந்து பேசிய இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், ஒத்த செருப்பு என்ற மிக சிந்த வித்தியாசமான படத்தை இயக்கி தயாரித்து நடித்திருக்கும் பார்த்திபனுக்கு இயக்குனர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும்’’ என்றார்.

#OththaSeruppuSize7 #OththaSerupuReview #Parthiepan #BioscopeFilmFramers #ResulPookutty #Ramji #Sudharshan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அயோக்யா ட்ரைலர்


;