‘யோகி’ பாபு, வருண், சம்யுக்த ஹெக்டே ஆகியோர் நடிக்கும் படம் ‘பப்பி’. இந்த படத்தில் படத்தின் டைட்டில் கதாபாத்திரத்தில் ஒரு நாயும் நடிக்கிறது. சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘கோமாளி’ படத்தை தயாரித்த ஐசரி கணேஷின் ‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் அக்டோபர் 11-ஆம் தேதி ரிலீசாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ‘நட்டு தேவ்’ என்கிற மொரட்டு சிங்கிள். விலங்குகளை மையபடுத்தி எடுக்கப்பட்ட சில படங்கள் சமீபத்தில் ரிலீசான நிலையில் நாய் முக்கிய கதாபாத்திரமாக இடம்பெறும் இப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு தரண் குமார் இசை அமைத்துள்ளார். தீபக்குமார் பாடி ஒளிப்பதிவு செய்துள்ளார். காமெடி டிராமாவாக உருவாகியுள்ள இந்த படத்தை தமிழகம் முழுவதும் சக்திவேலனின் ‘சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் வெளியிடுகிறது.
#Varun #VelsFilmInternational #DrIsariKGanesh #SamyukthaHedge #YogiBabu #Puppy #DharanKumar #DeepakKumarPadhy #Richard #PuppyFromOct11th #PuppyTrailerFromToday
தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நகைச்சுவை நடிகராக விளங்கி வருபவர் ‘யோகி’ பாபு! தனது மாறுபட்ட...
வெற்றிப் பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் எடுப்பது டிரெண்டாகி உள்ள நிலையில் சுந்தர்.சி.இயக்கத்தில்...
யுவராஜ் சுப்ரமணி இயக்கத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா நடிக்கும் படம் ‘டாணா’. ‘நோபல் மூவீஸ்’ என்ற...