இந்த வாரம் எத்தனை படங்கள் ரிலீசாகின்றன?

இந்த வாரம் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’, ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’,  ‘கோலா’ ஆகிய மூன்று படங்கள் ரிலீசாகிறது!

செய்திகள் 27-Sep-2019 12:53 PM IST Top 10 கருத்துக்கள்

சென்ற வாரம் சூர்யாவின் ‘காப்பான்’, பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு சைஸ்-7’, மற்றும் ‘சூப்பர் டூப்பர்’ ஆகிய மூன்று படங்கள் வெள்ளித்திரைக்கு வந்தன! அந்த வரிசையில் இந்த வாரம் எத்தனை படங்கள் ரிலீசாகின்றன?

1.நம்ம வீட்டுப் பிள்ளை

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ ‘கடைக்குட்டி சிங்கம்’ வெற்றிப் படத்தை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கியிருக்கும் இப்படமும் கிராமத்துப் பின்னணியில் குடும்ப உறவுகளை பற்றிச் சொல்லும் படமாகும். சிவகார்த்திகேயன் நடிக்கும் 16-ஆவது படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இமானுவேல், சூரி, யோகி பாபு, பாரதிராஜா, சமுத்திரக்கனி, ஆர்.கே.சுரேஷ், நட்டி நட்ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசை அமைத்துள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை நீரவ்ஷா செய்துள்ளார். படத்தொகுப்பு வேலைகளை ரூபவன் கவனித்துள்ளார். ‘மிஸ்டர் லோக்கல்’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் இப்படம் நாளை (27-9-19) வெளியாகும் படங்களில் முக்கியமான படமாகும்!

2. திட்டம் போட்டு திருடுற கூட்டம்

‘கயல்’ சந்திரன், ‘பிச்சைக்காரன்’ படத்தில் நடித்த சாதனா டைடஸ் இணைந்து நடித்துள்ள படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’. அறிமுக இயக்குனர் சுதர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ‘கயல்’ சந்திரன், சாதனா டைட்டஸ் ஆகியோருடன் பார்த்திபன், சாம்ஸ், டேனியல் ஆனி பாப், அர்ஜெய் ஆகியோரும் நடிக்கின்றனர். ஒரு கும்பல் திட்டம் போட்டு, கிரிக்கெட் உலக கோப்பையை திருட முயற்சிக்கிறது. அந்த கும்பலின் திட்டம் நிறைவேறியதா? இல்லையா? என்பதை காமெடி கலந்து சொல்லும் படமே ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’.

‘2 Movie Buff’ என்ற நிறுவனம் சார்பில் ரகுநாதன் தயாரித்திருக்கும் இந்த படத்தை ‘SDC பிக்சர்ஸ்’ நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. அறிமுக இயக்குனர் சுதர் எழுதி இயக்கியுள்ள இந்த படத்திற்கு மார்ட்டின் ஜோ ஒளிப்பதிவு செய்துள்ளார். அஷ்வத் இசை அமைத்துள்ளார். வெங்கட்ரமணன் படத்தொகுப்பு செய்ய ரெமியன் கலை இயக்கத்தை கவனித்துள்ளார். சந்திரன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘ரூபாய்’. இப்படம் 2017 ஜூலை மாதம் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து ‘கயல்’ சந்திரன் நடிப்பில் வெளியாகும் படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’.

3. கோலா

‘மோத்தி ஆர்ட்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘கோலா’. மோத்தி.பா எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் அறிமுகங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஒளிப்பதிவை கேமில் ஜெ.அலெக்ஸ் செய்திருக்க, பாடல்களுக்கு கண்மணி ராஜா இசை அமைக்க, பின்னணி இசையை எஸ்.எம்.பிரசாந்த் அமைத்துள்ளார். கலை இயக்கத்தை ராம்ஜி கவனிக்க படத்தொகுப்பை தீபக் கவனித்துள்ளார். பல புதுமுகங்கள் ஒருங்கிணைந்துள்ள இப்படமும் நாளை ரிலீசாக இருக்கிறது.

மேற்குறிப்பிட்ட மூன்று நேரடித்தமிழ் படங்கள் இந்த வார ரிலீசாக நாளை வெளியாகிறது.

#NammaVeettuPillai #DImman #SivaKarthikeyan #SunPictures #ThittamPoattuThiruduraKootam #KayalChandran #TPTKFromSept27th #AnuEmmanuel #AishwaryaRajesh #DWPCreations #NVPFromSept27th#KolaFromSept27th #Kola #MothiArts

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;