‘அக்னி நட்சத்திரம்’ படத்தில் இணைந்த பிரபலங்கள்!

விதார்த், உதயா இணைந்து நடிக்கும் ‘அக்னி நட்சத்திரம்’ படத்தில் ஸ்மிருதி வெங்கட், சந்தனா ராஜ் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்!

செய்திகள் 24-Sep-2019 10:53 PM IST Top 10 கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் ஷரன் இயக்கத்தில் விதார்த்தும், உதயாவும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்றும் இந்த படத்திற்கு மணிரத்னம் பட டைட்டிலான ‘அக்னி நட்சத்திரம்’ டைட்டில் சூட்டப்பட்டுள்ளது என்றும் தகவலை வெளியிட்டிருந்தோம். இரண்டு ஹீரோயின்கள் நடிக்க இருக்கும் இந்த படத்தில் ‘தடம்’ படத்தில் நடித்த ஸ்மிருதி வெங்கட், ‘ தாதா-87’ படத்தில் நடித்த ஸ்ரீபல்லவி மற்றும் சந்தனா ராஜ், சாம்ஸ், நிரோஷா ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். உதயாவின் ‘ஜேசன் ஸ்டூடியோஸ்’ மற்றும் ‘CHARISMATIC CREATIONS’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு Y.R.பிரசாத் இசை அமைக்கிறார். L.K.விஜய் ஒளிப்பதிவு செய்கிறார். சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார். ‘ஸ்டண்ட்’ சில்வா சண்டை காட்சிகளை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, கோயம்பத்தூர், ஏலகிரி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

#Udhaya #Vidharth #ManiRatnamAgniNatchathiram #AgniNatchathiram #Sharan #YRPrasad #PaVijay #LKVijay #SanLokesh #StuntSilva #IshariKGanesh #VelsFilmInternational #smruthi venkat SriPallavi #Chandhana

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டூப்ளிகேட் டீஸர்


;