‘ஒத்த செருப்பு’ – பார்த்திபன் உருக்கமான வேண்டுகோள்!

‘ஒத்த செருப்பு’ படத்தை இன்னும் சில நாட்கள் ஓட விடுங்கள் – தியேட்டர்காரர்களுக்கு பார்த்திபன் விடுத்த உருக்கமான வேண்டுகோள்!

செய்திகள் 24-Sep-2019 4:48 AM IST Top 10 கருத்துக்கள்

பார்த்திபன் இயக்கி, தயரித்து, நடித்து சென்ற 20-ஆம் தேதி வெளியான படம் ‘ஒத்த செருப்பு சைஸ்-7’. பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்து வித்தியாசமாக எடுக்கப்பட்ட இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் வெளியான நாளில் இருந்து இப்படத்திற்கு கிடைத்துள்ள நல்ல விமர்சனங்கள் மற்றும் விளம்பரங்கள் மூலம் இந்த படத்தை பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று சொல்லப்படுகிறது. இந்த வாரம் ‘நம்ம வீட்டு பிள்ளை’, ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ ஆகிய படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் பார்த்திபன், ‘ஒத்த செருப்பு’ படம் சம்பந்தமாக தியேட்டர் அதிபர்களுக்கு உருக்கமாக ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், ‘ஒத்த செருப்பு’ படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. வெள்ளி, சனி, ஞாயிறு என்று முன்று நாட்கள் கடந்து நல்ல விமர்சனங்களால் படம் இப்போது பிக்-அப் ஆகி நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வாரம் ‘நம்ம வீட்டு பிள்ளை’, ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ ஆகிய படங்கள் ரிலீசாக இருக்கிறது. அதனால் புதிதாக ரிலீசாகும் படங்களுக்கு அதிகமாக தியேட்டர்களை ஒதுக்குவது வழக்கம். இது நியாயமான விஷயமும் கூட என்பது எனக்கு தெரியும்!

‘ஒத்த செருப்பு’ ஒரு கனவு படம்! இது போன்ற படங்கள் எப்போதாவது தான் வரும். இது மாதிரியான படங்களுகு முதல் வாரம் வரவேற்பு இருக்காது. அதனால் புதிதாக வரும் படங்களுக்கே தியேட்டர் உரிமையாளர்கள் முன்னுரிமை கொடுப்பார்கள்! இந்த விஷயம் நியாமனது என்பதும் தவிர்க்க முடியாதது என்பதும் எனக்கு தெரியும்! இருந்தாலும் என் படத்தை உங்கள் குழந்தையாக எடுத்துக்கொண்டு, உங்களுடைய நண்பருடைய படமாக நினைத்துக் கொண்டு இந்த படத்துக்கு கொஞ்சம் காட்சிகளை கொடுத்து இன்னும் ஒரு வாரத்துக்கு திரையிடுங்கள்! கொஞ்சம் நோஞ்சானாக இருக்கும் ஒருவரை அடித்து வீழ்த்தாமல் அவனுக்கான வாய்ப்பை கொஞ்சம் கொடுத்து உதவுமாறு அன்போடும், தாழ்மையோடும் கேட்டுக்கொள்கிறேன். அப்போதுதான் என் இருப்பை இங்கு பதிவு செய்ய முடியும். ஒரு கமர்ஷியல் படத்திற்கு என்னவெல்லாம் தேவையோ அதெல்லாம் இருக்கும் இந்த படத்தை இன்னும் சில தினங்கள் ஓட விடுங்கள்’’ என்று பார்த்திபன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்!

#Parthiepan # OthaSeruppuSize7 #SanthoshNarayanan #Ramji #OthaSeruppuSize7FromSeptember20th

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

A1 டீஸர் 2


;